ஊழியர் எடுக்காத விடுப்புகளுக்கு 21 கோடி ரூபாய் சன்மானமா..?

சத்தியமாக இது ஏதோ கீழ் நிலை ஊழியர்களோ அல்லது மார்க்கெட்டிங்கில் இருந்த ஊழியர்களோ கிடையாது. அசுரப் பணம் பார்க்கின்றன டாப் கார்ப்பரேட் பெருந்தலைக்கு கொடுத்த பணம்

அனில் மனிபாய் நாயக்

அனில் மனிபாய் நாயக்

சுருக்கமாக இவரை ஏ.எம். நாயக் என்பார்கள். இந்தியாவின் புகழ் பெற்ற கட்டுமான நிறுவனமான லார்சன் அண்ட் டியூப்ரோ (L and T) நிறுவனத்தின் செயல் தலைவராக (Executive Chairman) இருந்து வெளியே வந்தவர். இவர் வேலைக்கு சேர்ந்ததில் இருந்து வேறு நிறுவனத்துக்கு மாறவே இல்லை. இவர் எல் அண்ட் டி நிறுவனத்தில் 2003 வரை சாதாரண பதவிகளில் தான் இருந்தார்.

வளர்ச்சி

வளர்ச்சி

டிசம்பர் 2003-ல் இவர் எல் அண்ட் டி நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். நல்ல வலர்ச்சி காட்டினார். பின் மொத்த எல் அண்ட் டி குழுமத்துக்குக் செயல் தலைவராக 2012-ம் ஆண்டு நியமிக்கபப்ட்டார். 2017-ல் தான் செயல் தலைவர் பதவியில் இருந்து வெளியேறினார். அதன் பின்னும் இப்போது வரை மொத்த குழுமத்துக்கும் தலைவராக மட்டும் இருந்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

2017 - 18 நிதியாண்டு

2017 - 18 நிதியாண்டு

லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனத்தின் 2017 - 18 நிதி ஆண்டின் நிதி நிலை அறிக்கைகளையும் ஆண்டு அறிக்கைகளையும் படித்தால் இவர் எல் அண்ட் டியில் பணியில் இருந்த காலத்தில் எடுக்காத விடுப்புகளுக்கு எவ்வலவு கொடுத்திருக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது. 21 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்களாம்.

மற்ற பணம்

மற்ற பணம்

ஒட்டு மொத்தமாக ஏ.எம்.நாயக்குக்கு 137 கோடி ரூபாய் சம்பளம், கமிஷன், ESOP அடிப்படையில் நிறுவன பங்குகள், விடுப்புகளுக்கு கொடுக்க வேண்டிய தொகை, அவர் பயணப் படி, அவருக்கான தினப் படி, அவருக்கான சொகுசுப் படிகள், ஓய்வு கால செட்டில்மெண்டுகள் எனக் க்கொடுத்திருக்கிறார்களாம்.

தான தருமங்கள்

தான தருமங்கள்

இவர் தன்னிடம் இருந்த மொத்த சொத்தில் சுமார் 75 சதவிகிதத்தை மருத்துவமனைகள், கல்விச் சாலைகள் மற்றும் இளைஞர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளில் சமூக நலனுக்காக எழுதி வைத்துவிட்டாராம். சமீபத்தில் இவருக்கு பத்ம விபூஷன் விருதும் வழங்கி இந்தியா கெளரவித்திருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+