2018-ம் ஆண்டு உலகில் அதிக கார்களை விற்ற நிறுவனமாக ஜெர்மனியைச் சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் தன் பட்டத்தை தானை மீண்டும் உயர்த்திப் பிடித்திருக்கிறது. 2016-ம் ஆண்டு ஜப்பானின் டொயோட்டா நிறுவனத்தை விட கூடுதலாக கார்களை விற்று உலகின் மிகப் பெரிய கார் நிறுவனமாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. சொகுசு கார்களில் ஒன்றான ஆடியும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் துணை நிறுவனங்களுள் ஒன்று தான்.
2018-ல்
கடந்த 2018-ம் ஆண்டில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 10.8 மில்லியன் (1.08 கோடி) கார்களை விற்று இருக்கிறது. டொயோட்டா நிறுவனமோ வோக்ஸ்வேகனை விட 0.2 மில்லியன் (2 லட்சம்) கார்களை குறைவாக விற்று இரண்டாவது பெரிய நிறுவனமாக வளம் வருகிறது.
சீன வரவு
சீனாவில் ஃபோக்ஸ்வேகன் தன் கார்களை விற்கத் தொடங்கிய பிறகு தான் டொயோட்டாவின் முதல் இடத்தை தட்டிப் பறித்தது. ஆனால் இப்போது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின் கார் சந்தை சுருங்கிக் கொண்டிருப்பதாக எச்சரிக்கை செய்திருக்கிறது ஃபோக்ஸ்வேகன்.
நிச்சயமற்ற எதிர்காலம்
உலக கார் தயாரிப்பாளர்களுக்கு முன் கடுமையான புகை வெளியீட்டுச் சட்டங்கள் பெரிய சவாலாக இருக்கிறது. இதனால் பேட்டரி பொருத்தப்பட்ட மின் வாகனங்களைத் தான் அதிகம் தயாரித்து விற்க வேண்டி இருக்கிறது. ஆனால் லாபமோ சாதாரன பெட்ரோல் டீசல் போன்ற கம்பஸ்டன் ரக வாகனங்களில் தான் அதிகமாக இருக்கிறதாம்.
லாபம்
என்ன தான் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அதிக கார்களை விற்றாலும் லாபம் என்பது ஆடி, லாம்போர்கினி போன்ற துணை நிறுவனங்களில் இருந்து தான் அதிகம் வருகிறதாம். சாதாரண வோக்ஸ்வேகன் ரக கார்களில் அதிக லாபம் கிடைப்பதில்லை எனச் சொல்கிறது அந்நிறுவனம்.
டொயோட்டா
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான டொயோட்டா தன் சாதாரண வாகனங்களில் இருந்தும் நல்ல லாபம் பார்க்கிறார்களாம். டொயோட்டா நிறுவன கார்களில் கொரொல்லா ரக கார்கள் தான் உலக அளவில் அதிகம் விற்பனை ஆகிறதாம். அதை சீனாவில் சிறப்பாக விளம்பரப்படுத்தி தன் இழந்த நம்பர் 1 இடத்தை பிடிக்க முயல்கிறதாம்.


Click it and Unblock the Notifications