நேற்று ஜனவரி 29, 2019 செவ்வாய்க்கிழமை அன்று உத்திரப்பிரதேச வரலாற்றிலேயே இரண்டாவது முறையாக தலை நகரத்துக்கு வெளியில், கும்ப் பகுதியில் கூடியது உத்திரப் பிரதேச கேபினட். அந்த கூட்டத்தில் உலகின் மிக நீளமான ஹைவே மீரட்டில் இருந்து ப்ரக்யராஜ் வரை அமைக்கப்படும் என கூடி முடிவெடுத்திருக்கிறார்கள். உத்திரப் பிரதேசத்தில் தற்போது குமப்மேளா எனும் மிகப் பெரிய ஹிந்துக்கள் திருவிழா கோலாகலமாக கொண்டாடப் பட்டு வருகிறது.
இதற்கு மத்தியில் ஒரு கூடாரத்தில் அமர்ந்து கொண்டு தான் இந்த மிகப் பெரிய திட்டத்துக்கு அனுமதி அளித்திருக்கிறது உத்திரப் பிரதேசத்தை ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசு. இதற்கு முழு முதல் காரணம் முதலமைச்சர் மற்றும் சாமியார் யோகி ஆதித்யநாத் தானாம்.
ஹைவே விவரம்
இந்த திட்டத்துக்கு கங்கா எக்ஸ்பிரஸ்வே என பெயரிட்டு இருக்கிறார்கள். இந்த நெசுஞ்சாலை 600 கிலோமீட்டர் தூரம் வரை நீளும், சுமார் 6500 ஹெக்டேர் பரப்பில் அமைய இருக்கிறதாம். மீரட்டில் தொடங்கி கங்கா நெடுங்சாலை அமரோ, புலந்த்சர், பதூன், ஷாஜஹானாபூர், கன்னோஜ், உன்னாவ், ரெபரேலி, பிரதாப்கர் வழியாக ப்ரக்யராஜ் (அலஹாபாத்)-க்கு வந்து முடியுமாம்.
முதல் சந்திப்பு
1962-ம் ஆண்டு கோவிந்த் வல்லப பந்த் உத்திரப் பிரதேசத்தி முதல்வராக இருந்த போது லக்னெள இல்லாமல் நைனிதாலில் கூடியது உத்திரப் பிரதேச கேபினெட்.
உரிக்கு வரி வேண்டாமே
உத்திரப் பிரதேச கேபினெட்டில் கங்கா நெடுஞ்சாலை திட்டத்துக்கு அனுமதி வழங்கிய அதே கூட்டத்தில் இன்னொரு ஆச்சர்ய அறிவிப்பும் வெளியானது. சமீபத்தில் யாமி கெளதம், விக்கி கெளசல், பரேஷ் ராவல் ஆகியோர் நடித்து வெளியான உரி திரைப்படத்துக்கு உத்திரப் பிரதேச அரசு வரி தள்ளுபடிச் செய்திருக்கிறதாம். காரனம் பாஜகவின் அதிரடி ராணுவ நடவடிக்கைகளை பாராட்டும் விதமாக இருப்பதால் இந்த முடிவாம்.
நிலத்தைக் ராமனுக்குக் கொடுங்கள்
இந்த கூட்டம் முடிந்த உடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த யோகி, பிரச்னைக்குரிய நிலத்தை ராம் ஜென்மபூமி நியாஸ் என்கிற அமைப்பிடம் கொடுக்குமாறு தன் ஹிந்துத்வா துவைத்தக் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.
அதன் பின் கங்கா சங்கம இடத்தில் குளியல், ஆரத்தி, பூஜை ஆசிர்வாதங்கள் என சாமியார் சாமியாராகவே பயணித்திருக்கிறார் யோகி ஆதித்யநாத்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications