டெல்லி: மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருவதால், அதற்கு பதிலாக, நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் பியூஷ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் அறிவிப்புகளை கீழே பார்க்கலாம்.
இனிமேல் வீட்டுக்கடனுக்கான வட்டிசலுகை 2வீடுகளாக உயர்த்தப்படும்
இதுவரை ஒரு வீட்டுக்கடனுக்கான வட்டிக்கு மட்டுமே வரி விலக்கு தரப்பட்டது
வீட்டு வாடகைக்கான வரி விலக்கு 1,80000 ரூபாயிலிருந்து 2,40000 ரூபாயாக அதிகரிப்பு
வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வால் 3 கோடி பேருக்கு பலன்
நிலையான கழிவு 40,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்வு
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் 3.38 லட்சம் போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டது
இந்தியா 5 லட்சம் கோடி டாலர் மதிப்பு பொருளாதாரமாக முன்னேறும்- பியூஷ் கோயல்
2030க்குள் பல்வேறு இலக்குகளை இந்தியா அடையும்- பியூஷ் கோயல்
சினிமா தயாரிப்புகளுக்கான ஜி.எஸ்.டி மிக குறைந்த அளவாக 12% நியமனம்
பியூஷ் கோயல் அறிவிப்பால் மாத சம்பளதாரர்கள் ஏமாற்றம்
வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது-பியூஷ் கோயல்
வீடு வாங்குவோர் சுமையை குறைக்க ஜிஎஸ்டி கவுன்சிலை கேட்டுக்கொள்கிறோம்-பியூஷ் கோயல்
நடுத்தர வர்க்க மக்களின் வரிச்சுமையை குறைப்பதே அரசின் இலக்கு- பியூஷ் கோயல்
ரயில் விபத்துகள் கடந்த ஆண்டில் வெகுவாக குறைவு
உலகிலேயே மொபைல் டேட்டாவிற்கு குறைந்த கட்டணம் கொண்ட நாடு இந்தியா- பியூஷ் கோயல்
அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் டிஜிட்டல் கிராமங்கள் அமைக்கப்படும்
வருவாய் 6 லட்சத்து 38 ஆயிரம் கோடியிலிருந்து 12 லட்சம் கோடியை தாண்டியுள்ளது- பியூஷ் கோயல்
ராணுவத்திற்கு முதல் முறையாக ரூ3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
பியூஷ் கோயல் அறிவிப்பை கேட்டு 'ஜெய் ஜவான்' என பாஜக எம்பிக்கள் கோஷம்
முத்ரா திட்டத்தில் 7.23 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது- பியூஷ் கோயல்
பெண்கள் நலனுக்காக கூடுதலாக 8 கோடி இலவச காஸ் இணைப்பு வழங்கப்படும்
மாத வருவாய் 15 ஆயிரம் வரை வருவாய் உள்ளோருக்கான திட்டம்
60 வயதுக்கு பிறகு மாதம் ரூ.3000 பென்ஷன் கிடைக்கும்
29 வயதில் பென்ஷன் திட்டத்தில் சேருவோர் மாதம் 100 செலுத்தினால் போதும்
19 வயதில் பென்ஷன் திட்டத்தில் சேருவோர் 55 ரூபாய் செலுத்தினால் போதும்
பணியாளர்கள் செலுத்தும் தொகைக்கு ஈடாக மத்திய அரசு பணம் செலுத்தும்
சிறு விவசாயிகளுக்கான உதவித்தொகை மூலம் 12 கோடி விவசாய குடும்பங்கள் பலன் பெறும்
3 தவணைகளில் இந்த பணம் நேரடியாக விவசாயிகள் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்படும்
தவறு செய்த தொழில் அதிபர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது
தூய்மை இந்தியா திட்டம் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு இருக்கிறது
98% கிராமங்களில் சுகாதாரம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு இருக்கிறது
5.45 லட்சம் கிராமங்களில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது
மின்சாரம் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்-பியூஷ் கோயல்
அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படையாக நடக்கிறது
பினாமி சட்டம், ரியல் எஸ்டேட் தொழிலை சுத்தப்படுத்தியுள்ளது
பொருளாதார குற்றவாளிகளை கைது செய்ய சட்டம் கொண்டு வந்துள்ளோம்
மத்திய அரசு சொன்னபடியே நடந்து வருகிறது- பியூஷ் கோயல்
வங்கி துறை சீர்திருத்தங்கள் சிறந்த பலனை தரத் தொடங்கியுள்ளன
வராக்கடனை குறைப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளோம்
பணவீக்கம் அதிகரித்திருந்தால் மக்கள் செலவீனம் 40% வரை அதிகரித்திருக்கும்
விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்- பியூஷ் கோயல்
இந்தியா உறுதியான பாதையில் முன்னேறுகிறது-பியூஷ் கோயல்
எந்த ஒரு அரசு காலத்தைவிடவும் தற்போது ஜிடிபி அதிகமாக உள்ளது
புதிய இந்தியா 2022 என்ற இலக்கை நோக்கி முன்னேறுகிறது
பியூஷ் கோயல் உரைக்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்து கோஷம்
பட்ஜெட் தாக்கலின்போதும் லோக்சபாவில் போராட்டம் நடத்த திட்டம்
நாடாளுமன்ற காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தினர் தெலுங்கு தேசம் எம்பிக்கள்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்
பண மதிப்பிழப்பு அமலாக்கப்பட்ட வருடத்தில்தான் வளர்ச்சி 8.2 சதமாக இருந்தது- ப.சிதம்பரம்
இந்த முறை 100 ரூபாய் நோட்டுக்களை அழித்தொழிப்போம் - ப.சிதம்பரம் கிண்டல்
45 வருடங்களில் இல்லாத அளவுக்கு மோசமான வேலைவாய்ப்பு சூழல் இப்போது - ப.சிதம்பரம்
மோடி அரசு ஜிடிபி வளர்ச்சியை மேல்நோக்கி திருத்தியுள்ளது - ப.சிதம்பரம்
உண்மையில் வேலைவாய்ப்பின்மையும் கூட அதே போலதான் உள்ளது - ப.சிதம்பரம்
நாடாளுமன்ற நூலக வளாகத்தில் அமைச்சரவைக் கூட்டம்
சிசிடிவி கேமராக்கள், வைபை வசதிக்கான பட்ஜெட் அதிகரிக்கும் என்று நம்புகிறேன் - சின்ஹா
பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில் ரூபாய் மதிப்பு சரிந்தது
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 71.17 ஆக உள்ளது
காங்கிரஸ் மூத்த தலைவர் மனிஷ் திவாரி குற்றச்சாட்டு
காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது
இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பாக வாழ்த்து பெற்றார்
காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
பட்ஜெட்டுக்கு இறுதிவடிவம் கொடுக்கும் பணியில் தீவிரம்
மத்திய இடைக்கால பட்ஜெட் தூர்தர்ஷன் டிவி சேனலில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும்
'ஒன்இந்தியா' தமிழ் இணையதளத்தில் பட்ஜெட் தொடர்பாக உடனுக்குடன் லைவ் அப்பேட் பெறலாம்
பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை
அடுத்த 4 மாதங்களுக்கான வரவு செலவுகளை உள்ளடக்கி இந்த பட்ஜெட் இருக்கும்
பெரிய கொள்கை முடிவுகள் அறிவிக்கப்பட வாய்ப்பில்லை

More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications