சந்தா என்றால் ஐசிஐசிஐ, ஐசிஐசிஐ என்றால் சந்தா கோச்சர் என்கிற நிலை தற்போது உடைந்து சிதறிவிட்டது. வங்கி தனக்கும் தன் நற்பெயருக்கும் ஒரு களங்கம் ஏற்பட்ட உடனேயே இத்தனை காலம் ஐசிஐசிஐ வங்கியை, தன் நிறுவனமாக வளர்த்த சந்தா கோச்சாரையே நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ பதவியில் இருந்து முன் தேதி இட்டு விலக்கியது இல்லாமல் இப்போது கொடுத்த காசை வேறு திருப்பி கேட்கிறது.
ஐசிஐசிஐ வங்கித் தலைவர்
ஏப்ரல் 2009-ம் ஆண்டு தான் சந்தா கோச்சார் ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ வாக ஐசிஐசிஐ வங்கியின் இயக்குநர் குழுவால் நியமிக்கப்பட்டார். அதன் பின் இந்தியாவின் டாப் வங்கிகளில் ஒன்றாக ஐசிஐசிஐ நிறுவனத்தை வளர்த்து எடுத்ததில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. இவரின் நிர்வாக திறனுக்கு உலகின் வலிமையான பெண்கள் பட்டியலில் டாப் 100 இடங்களில் 2010 முதல் 2017 வரை பல்வேறு இடங்களைப் பிடித்தார். அதுவும் தொடர்ந்து.
பதவி விலகல்
வீடியோகான் ஊழலில் சிக்கிய பின் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி என் ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையில் சந்தா கோச்சார் குற்றம் செய்ததை உறுதிபடுத்திய பின் அக்டோபர் 04, 2018-ல் ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் பதவி விலகினார்.
போனஸ் மற்றும் ஈஸாப்
ஆக ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ பதவியில் சந்தா கோச்சார் நியமிக்கப்பட்டதையே ரத்து செய்துவிட்டது ஐசிஐசிஐ வங்கி. அதனால் 2009 முதல் 2018 வரையான ஒன்பது ஆண்டுகளில் ஐசிஐசிஐ வங்கி சந்தா கோச்சருக்குக் கொடுத்த போனஸ் தொகை, Employee stock options முறையில் கொடுத்த ஐசிஐசிஐ நிறுவன பங்குகள் என அனைத்தையும் திருப்பிக் கொடுக்கச் சொல்லி இருக்கிறது.
போனஸ் 10 கோடி + ஈஸாப் 343 கோடி
போனஸ் பணமாக ஒவ்வொரு ஆண்டும் லட்சத்தில் தொடங்கி கோடிக் கனக்கில் ஐசிஐசிஐ சந்தா கோச்சருக்கு கொடுத்திருக்கிறது. ஒட்டு மொத்தமாக 2009 முதல் 2018 வரை 10 கோடி ரூபாயை போனஸாகக் கொடுத்திருக்கிறது. ஐசிஐசிஐ நிறுவன ஊழியர்களுக்கு ஈஸாப் முறையில் ஐசிஐசிஐ நிறுவனம் கொடுக்கும் பங்குகளும் சம்பளத்துக்கு இணையாகவே கருதப்படும். அப்படி சுமார் 343 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் சந்தாவுக்கு கொடுத்திருக்கிறார்களாம். அதையும் திருப்பிக் கொடுக்கச் சொல்லி இருக்கிறது ஐசிஐசிஐ வங்கி.
ஆண்டு வாரியாக கொடுத்திருக்கிறோம்.
சந்தா கோச்சர் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு போனஸ் வாங்கினார். ஈஸாப் முறையில் எத்தனை பங்குகளை வாங்கினார் போன்ற விவரங்கள் மேலே படத்தில் கொடுத்திருக்கும் விவரங்களைப் பார்க்கவும்.


Click it and Unblock the Notifications