கடைசி ஜும்லா பட்ஜெட்.. இணையத்தில் நெகட்டிவ் டிரெண்டில் பாஜக.. நெட்டிசன்ஸ் அலும்பல்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டிற்கு எதிராக இணையத்தில் #AakhriJumlaBudget என்ற டேக் வைரலாகி உள்ளது. இதன் அர்த்தம் கடைசி ஜும்லா (ஏமாற்று) பட்ஜெட் என்பதாகும்.

 

தனது கடைசி பட்ஜெட்டை மத்திய பாஜக அரசு இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தது. மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஷ் கோயல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இது தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வைரலாகி வருகிறது

வைரலாகி வருகிறது

இணையத்தில் இதற்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதையடுத்து இந்த பட்ஜெட்டை எதிர்த்து தற்போது புதிய டேக் ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது. கடைசி ஏமாற்று பட்ஜெட் என்று டேக் (#AakhriJumlaBudget) உருவாக்கி வைரல் செய்து வருகிறார்கள். தேசிய அளவில் இந்த டேக் வேகமாக முன்னேறி வருகிறது.

ராகுல் டிவிட்

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்துள்ள டிவிட்டில், அன்புள்ள நோமோ, 5 வருட மோசமான, திறமையற்ற அரசால் விவசாயிகளின் வாழ்க்கை நாசமாகிவிட்டது. இப்போது போய் தினமும் அவர்களுக்கு 17 ரூபாய் கொடுத்து அவர்களை மேலும் அசிங்கப்படுத்தும் வேலையை பார்க்கிறீர்கள். அவர்களின் போராட்டத்தை அசிங்கப்படுத்திவிட்டீர்கள், என்று கோபமாகவும் கிண்டலாகவும் கூறியுள்ளார்.

 

காங்கிரஸ் டிவிட்

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி செய்துள்ள டிவிட்டில், பிரதமர் மோடி, தயவு செய்து எளிதாக நிரூபிக்க கூடிய விஷயங்களில் பொய் சொல்லி இப்படி இனி மாட்டிக்கொள்ளாதீர்கள், என்று மோடிக்கு ஐடியா கொடுத்து கிண்டல் செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் பக்கம் முழுக்க #AakhriJumlaBudget ல் நிறைய டிவிட்டுகள் செய்யப்பட்டு இருக்கிறது.

ஜிடிபி

இந்தியாவின் ஜிடிபி 7.2 என்று நேற்றுதான் மத்திய அரசால் திருத்தப்பட்டது. ஆனாலும் கூட மத்திய அரசால் 2009-2010ல் எடுக்கப்பட்ட 8.84 ஜிடிபியை தொட முடியவில்லை. இதை சுட்டிக்காட்டி, மோசமான அரசு எப்போதும் பொய் சொல்லும் என்று இவர் கிண்டல் செய்துள்ளார்.

என்ன கணக்கு

மத்திய அரசு பட்ஜெட்டில் 34 கோடி வங்கி கணக்குகளை திறந்து இருப்பதாக பியூஷ் கோயல் கூறினார். இவர் அதை கிண்டல் செய்து, 34 கோடி வங்கி கணக்குகள் திறந்து இருக்க வாய்ப்புள்ளது , ஆனால் அதில் எத்தனை கணக்கு பயன்பாட்டில் இருக்கும், எதிலாவது ஒரு ரூபாய்க்கு மேல் போடப்பட்டு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் இவர்.

எப்படி இருந்தது

இந்த பட்ஜெட் பார்த்துட்டு மக்களோட ரியாக்சன் எப்படி இருந்தது தெரியுமா.. அதோ பாருங்க அந்த குட்டி பாப்பா.. அதோட நாக்கு மாதிரி இருந்தது!

லாலிபாப் நிறுவனம்

மோடி அரசே ஒரு பெரிய லாலிபாப் நிறுவனம் என்பர் என்று இவர் கிண்டல் செய்துள்ளார்.. ஓ பாப்பா லாலி!

என்ன ஆனது

2014ல் நிறைய ஜூம்லாக்களை சொல்லி பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தார்.. அதே ஜூம்லாக்களால் பிரதமர் 2019ல் ஆட்சியை இழப்பார்.. இதனால் அவருக்கு மீண்டும் வாக்களிக்கும் முன் அவர் சொன்ன 15 லட்சம் ரூபாய் வாக்குறுதி என்ன ஆனது என்று யோசித்து பாருங்கள், என்று இவர் கலாய்த்து இருக்கிறார்.

இணையத்தில் அடி

இணையத்தில் அடி

இணையத்தில் சமீப காலமாக பாஜக அதிக அளவில் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. பிரதமர் மோடிக்கு எதிராக தமிழகத்தில் உருவாக்கப்பட்ட #GoBackModi உலக அளவில் வைரலானது. தற்போது #AakhriJumlaBudget டேக் வைரலாவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2019: #AakhriJumlaBudget trends against Central's Budget

Budget 2019: #AakhriJumlaBudget trends against BJP's last Budget.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X