வங்கிகளில் கடன் மோசடி செய்திருக்கும் தொழில் அதிபர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசி இருக்கிறார்.
டெல்லி: வங்கிகளில் கடன் மோசடி செய்திருக்கும் தொழில் அதிபர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசி இருக்கிறார். இதையடுத்து அவர் பாஜகவினர் சாதனைகளை பட்டியலிட்டார்.
மத்திய பாஜக அரசு இன்று லோக்சபாவில் தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இதில் மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் மத்திய அரசின் சாதனைகளை அடுக்கி பேசினார்.
கடந்த நான்கரை வருடங்களில் பாஜக கொண்டு வந்த திட்டங்களை அவர் பட்டியலிட்டார். மத்திய அரசின் கடைசி ஐந்து மாதங்களுக்கான பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
ரியல் எஸ்டேட் துறை
பியூஷ் கோயல் தனது பேச்சில், அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.ரியல் எஸ்டேட் தொழிலில் வெளிப்படையான செயல்பாடுகளை உறுதி செய்துள்ளோம். தவறு செய்த தொழில் அதிபர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வங்கிகளின் வாராக் கடன்களைக் குறைக்கும் வகையில் சீர்த்திருத்தங்கள் செய்யப்பட்டன. வங்கிகளின் வாராக்கடன் ரூ 3 லட்சம் கோடி மீட்கப்பட்டு உள்ளது
தூய்மை இந்தியா திட்டம்
தூய்மை இந்தியா திட்டம் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு இருக்கிறது .98% கிராமப்புற சுகாதாரம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. 5.45 லட்சம் கிராமங்களில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய சுகாதாரத் திட்டத்தை பாஜக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் அளிக்கப்படும். மின்சாரம் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்.
கிராமப்புறங்களில் சாலை
கிராமப்புறங்களில் சாலைகள் அதிக அளவில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை கிராம சாலைத் திட்டத்துக்கு ரூ.19 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பொருளாதாரத்தில் மோசமாக நலிவடைந்த மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 17லட்சத்து 4ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
மருத்துவமனை
நாட்டில் 22 ஆவது எய்ம்ஸ் மருத்துவமனை ஹரியானாவில் அமைக்கப்படவுள்ளது. 2014ல் 14-ஆக இருந்த எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை தற்போது 21 ஆகியுள்ளது. ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவுப்பொருட்கள் வழங்க ரூ.1.70 லட்சம் கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. சவுபாக்யா திட்டத்தின்கீழ் அனைத்து வீடுகளுக்கும் மின்இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications