இந்த பட்ஜெட்டில் இத்தனை விஷயம் மூத்த குடிமக்களுக்கா..?

அட ஆமாங்க, சாதாரண நடுத்தர மக்கள் ஒருபக்கம் கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்கன்னா இப்ப மூத்த குடிமக்களும் இனி கொஞ்சம் நிம்மதியா இருக்க முடியும். அதெல்லாம் என்னன்னு பாத்துருவோம்..

மூத்த குடிமக்கள்

மூத்த குடிமக்கள்

பொதுவாக வயதானவர்கள் தங்களைப் பார்த்து கொள்ள என்ன செய்வார்கள், ஓய்வு பெற்றவர்கள் பென்ஷன் பெறுவார்கள். பென்ஷன் பெறாதவர்கள் தங்கள் கையில் இருக்கு காசை வங்கி எஃப்டி போன்ற பாதுகாப்பான முதலீடுகளில் போட்டு வரும் வருவாயில் நாட்களை ஓட்டுவார்கள். தங்கள் வீட்டை சில சின்ன போர்ஷன்களாகக் கட்டி வாடகை வசூலிப்பார்கள். இப்படி வயதாவர்கள் செய்யும் எல்லா விஷயங்களுக்கும் வருமான வரித் துறையிடம் முன் கூட்டி வரியைச் செலுத்தி விட்டு மீண்டும் நடையோ நடை என நடந்து தேவையானதை பெற வேண்டும். இந்த பட்ஜெட்டில் அதற்கு எல்லாம் ஒரு நல்ல விடிவு பிறந்திருக்கிறது.

Tax Deducted at Source

Tax Deducted at Source

வங்கி எஃப்டிகளுக்கு கிடைக்கும் வட்டி தொடங்கி சாதாரண அஞ்சலக கணக்குகளில் வட்டியை வருமானமாகப் பெற பணத்தைப் போட்டு வைப்பார்கள். இந்த வட்டித் தொகை ஆண்டுக்கு 10,000 ரூபாய்க்கு மேல் போனால் வங்கி அல்லது அஞ்சலக அலுவலகங்களே டிடிஎஸ் பிடித்தம் செய்து வருமான வரித்துறையிடம் செலுத்தி விடுவார்கள். மீண்டும் பெரியவர்கள் வருமான வரித்துறையினரிடம் முறையிட்டு கணக்கு சொல்லி வரி தாக்கல் செய்து ரீஃபண்டு பெற வேண்டும். இனி ஆண்டுக்கு 40,000 ரூபாய் வரை வங்கி வட்டிகளுக்கு டிடிஎஸ் பிடிக்க வேண்டாம் என புதிய பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார்கள்.

கூடினால் பிரச்னை தான்

கூடினால் பிரச்னை தான்

தங்கள் வீட்டின் மேல் பகுதி அல்லது கீழ் பகுதி எதையாவது வருமானத்துக்காக வாடகைக்கு விடும் பெரியவர்களும் உண்டு. அப்படி விடும் போது தனி நபர்களாக இருந்தால் பரவாயில்லை. இதுவே ஒரு கம்பெனிகளுக்கு வாடகைக்கு விட்டால அவர்கள் காசோலையாகவோ அல்லது வங்கிப் பரிவர்த்தனைகளாகவோ தான் தருவாரக்ள். அப்படித் தரும் போது ஆண்டுக்கு 1,80,000 ரூபாய்க்கு மேல் வாட்கை போனால் உடனடியாக டிடிஎஸ் பிடித்தம் செய்வார்கள். இனி 2,40,000 ரூபாய் வரை வீட்டு வாடகைகளுக்கு டிடிஎஸ் செய்யத் தேவை இல்லை என புதிய பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார்கள்.

Notional Rent

Notional Rent

ஏப்ரல் 01, 2018-ம் தேதி நிலவரப்படி ஒருவருக்கு ஒரு வீடு இருக்கிறது. மார்ச் 31, 2019 வரையான காலத்தில் (முழு நிதியாண்டில்) அவர் அந்த வீட்டை வாடகைக்கு விட வில்லை. ஆக அந்த வீடு மூலம் அவருக்கு ஒரு ரூபாய் கூட லாபம் இல்லை என்றால் கூட, அவருக்கு அந்த வீடு மூலம், அந்த நிதியாண்டில் குறைந்தபட்ச வருமானமாக 12,000 ரூபாய் வந்ததாகக் கணக்குச் சொல்லி அதற்கு வரி செலுத்த வேண்டும். இனி இப்படி வரி செலுத்தத் தேவை இல்லை என புதிய பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார் பியுஷ் கோயல்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+