மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் பெண்கள் நலனுக்கான முத்ரா திட்டத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
டெல்லி: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் பெண்கள் நலனுக்கான முத்ரா திட்டத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. பணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு பாஜக ஆட்சியில் 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது என்று நிதி அமைச்சர் கூறியுள்ளார்.
மத்திய பாஜக அரசு இன்று லோக்சபாவில் தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இடைக்கால பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

முத்ரா திட்டம் குறித்து இதில் மிக முக்கியமான அறிவிப்பை பியூஷ் கோயல் வெளியிட்டார். பெண்களுக்கு நலன் பயக்கும் அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது என்று அவர் கூறினார்.
அதில், முத்ரா திட்டத்தில் கடன் பெற்றவர்கள் 70 கோடி பேர். இதுவரை முத்ரா திட்டத்தில் 7.23 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பல கோடி ஏழை பெண்கள் பலன் அடைந்து இருக்கிறார்கள்.
இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 6 கோடி இணைப்புகள் தரப்பட்டுள்ளன. பெண்கள் நலனுக்காக கூடுதலாக 8 கோடி இலவச காஸ் இணைப்பு வழங்கப்படும்.
பணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பெண்கள் நல்ல வகையில் ஓய்வு எடுக்க முடியும். அதேபோல் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளும் இந்த காலத்தில் வழங்கப்படும், என்று நிதி அமைச்சர் தனது பட்ஜெட்டில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications