2020ல் புதிய இந்தியா பிறக்கும்.. சாதனைகளை கூறிய பியூஷ் கோயல்.. கூச்சலிட்ட எதிர்க்கட்சியினர்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: 2020ல் புதிய இந்தியா பிறக்கும் என்று லோக்சபாவில் பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் பேசி இருக்கிறார்.

 

மத்திய பாஜக அரசு இன்று லோக்சபாவில் தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. மத்திய அரசின் கடைசி ஐந்து மாதங்களுக்கான பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்யும் முன்பே எதிர்க்கட்சியினர் கூச்சலிட தொடங்கினார்கள். காங்கிரஸ் , தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்கள் பாஜகவிற்கு எதிராக கோஷமிட தொடங்கினார்கள்.

பியூஷ் கோயல் கருத்து

பியூஷ் கோயல் கருத்து

இந்த நிலையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பியூஷ் கோயல் பேசினார். மோடி அரசின் செயல்பாட்டை புகழ்ந்துரைத்து உரையை ஆரம்பித்தார் பியூஷ் கோயல். அதில், இந்தியா உறுதியான பாதையில் முன்னேறுகிறது.எந்த ஒரு அரசு காலத்தைவிடவும் தற்போது ஜிடிபி அதிகமாக உள்ளது. எப்போதும் நம்முடைய ஜிடிபி இவ்வளவு இருந்தது இல்லை.

பணவீக்கம் என்ன

பணவீக்கம் என்ன

புதிய இந்தியா 2022 என்ற இலக்கை நோக்கி முன்னேறுகிறது. மத்திய அரசு பண வீக்கத்தை 4.4 சதவீதமாக கட்டுக்குள் வைத்துள்ளது. பணவீக்கம் அதிகரித்திருந்தால் மக்கள் செலவீனம் 40% வரை அதிகரித்திருக்கும். விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்.

ஊழல் இல்லை
 

ஊழல் இல்லை

ஊழல் இல்லாத அரசாக செயல்பட்டு வருகிறோம். அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படையாக நடக்கிறது. பினாமி சட்டம், ரியல் எஸ்டேட் தொழிலை சுத்தப்படுத்தியுள்ளது. பொருளாதார குற்றவாளிகளை கைது செய்ய சட்டம் கொண்டு வந்துள்ளோம். மத்திய அரசு சொன்னபடியே நடந்து வருகிறது.

வங்கி சீர்திருத்தம்

வங்கி சீர்திருத்தம்

வங்கி துறை சீர்திருத்தங்கள் சிறந்த பலனை தரத் தொடங்கியுள்ளன. வராக்கடனை குறைப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளோம் என்று கூறினார். பட்ஜெட் உரையில் தொடர்ந்து அரசின் சாதனைகளை பட்டியலிட்டார் பியூஷ் கோயல். இதனால் அவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2019: New India will be born in 2020 says, Piyush Goyal

Budget 2019: New India will be born in 2020 says Piyush Goyal, He also added BJP's achievements.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X