மத்திய அரசு இன்னொரு முறை டிமானிடைசேஷன் கொண்டு வரட்டும், அப்போதுதான் இந்தியாவின் ஜிடிபி மேலும் முன்னேறும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மத்திய அரசை கிண்டல் செய்துள்ளார்.
டெல்லி: மத்திய அரசு இன்னொரு முறை டிமானிடைசேஷன் கொண்டு வரட்டும், அப்போதுதான் இந்தியாவின் ஜிடிபி மேலும் முன்னேறும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பட்ஜெட்டை முன்னிட்டு மத்திய அரசை கிண்டல் செய்துள்ளார்.
லோக்சபாவில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கிறது. இன்று மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறது.
கடைசி நான்கு மாதங்களுக்கான பட்ஜெட் ஆகும் இது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
வேலை வாய்ப்பின்மை
மத்திய அரசு நேற்று 2017-2018ம் ஆண்டிற்கான இந்திய உள்நாட்டு உற்பத்தியை 6.7ல் இருந்து 7.2 ஆக திருத்தியது. இதை சுட்டிக்காட்டிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மோடி அரசு இந்திய ஜிடிபியை உயர்த்தி அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால் நாட்டில் ஜிடிபி உயரவில்லை, வேலைவாய்ப்பின்மைதான் உயர்ந்து இருக்கிறது.
நிதி ஆயோக் பேச்சு
நிதி ஆயோக்கின் துணை தலைவர் ''வேலைவாய்ப்பு இல்லாமல் ஒரு நாட்டின் வளர்ச்சி எப்படி 7 சதவிகிதத்தை தொட முடியும்?'' என்று கேட்டு இருக்கிறார். அதைத்தான் நாங்களும் கேட்கிறோம் 45 வருடத்தில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் இருக்கும் போது எப்படி ஜிடிபி 7 சதவிகிதத்தை தொட்டது? என்று ப.சிதம்பரம் கேட்டு இருக்கிறார்.
இன்னொருமுறை
ப.சிதம்பரம் இன்னொரு டிவிட்டில், பிரதமர் மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போதுதான் இந்தியாவின் ஜிடிபி 8.2 % ஆக இருந்தது என்று மத்திய அரசு கூறியுள்ளது. அப்படி என்றால் இன்னொரு டிமானிடைசேஷன் கொண்டு வரட்டும். இந்த முறை 100 ரூபாய் நோட்டுக்களை அழித்தொழிப்போம் என்று ப.சிதம்பரம் கிண்டலாக தெரிவித்து இருக்கிறார்.
என்ன காரணம்
2017-2018ன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.2 சதவிகிதமாக உயர்ந்து இருப்பதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. முதலில் இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2017-2018ல் மொத்தம் 6.7 சதவிகிதமாக இருந்தது என்று கூறியது. அதை மாற்றி நேற்று மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. இதைத்தான் ப.சிதம்பரம் தற்போது கிண்டல் செய்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications