மத்திய அரசு இன்று தாக்கல் செய்யும் இடைக்கால பட்ஜெட்டிற்காக கோப்புகள் அடங்கிய பெரிய பெரிய மூட்டைகள் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
டெல்லி: மத்திய அரசு இன்று தாக்கல் செய்யும் இடைக்கால பட்ஜெட்டிற்காக கோப்புகள் அடங்கிய பெரிய பெரிய மூட்டைகள் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
லோக்சபாவில் இன்று மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் ஆகும் இது. தேர்தலை முன்னிட்டு இந்த பட்ஜெட் மீது அதிக கவனம் அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த பட்ஜெட்டிற்கான ஆவணங்கள் தற்போது நாடாளுமன்றம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
அட
இதில் வியக்க கூடிய விஷயம் என்னவென்றால் 40க்கும் மேற்பட்ட மூட்டைகள் இதற்காக வந்து உள்ளது. பச்சை நிற மூட்டையில் இந்த ஆவணங்கள் லோக்சபாவிற்கு வெளியே வைக்கப்பட்டு இருக்கிறது. இதில் சில மூட்டைகள் மட்டுமே உண்மையான பட்ஜெட் விவரங்களை கொண்டது. மற்ற மூட்டைகள் அதன் நகல்களை கொண்டது ஆகும்.
மொத்தமாக சோதனை
இந்த மூட்டைகள் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனை செய்யப்பட்டது. அதன்பின்பே இது லோக்சபாவிற்குள் கொண்டு செல்லப்பட்டது. இந்த மூட்டைகள் ஒவ்வொன்றும் பாதுகாப்பு கருதி தனித்தனியாக சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இல்லை
இதற்கு முன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது கூட இத்தனை ஆவணங்களை மத்திய அரசு கொண்டு வரவில்லை. ரயில்வே பட்ஜெட்டை ஒரு சிறிய சூட்கேசில் கொண்டு வந்த வரலாறும் கூட இந்திய லோக்சபாவில் நடந்து இருக்கிறது. இந்த நிலையில்தான் இத்தனை மூட்டைகள் வந்து இறங்கியுள்ளது.
என்ன திட்டம்
இந்த நிலையில் மத்திய அரசின் திட்டம் என்ன என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. இடைக்கால பட்ஜெட்டிற்கு மத்திய அரசு லோக்சபா தேர்தலை முன்னிட்டு அதிக முக்கியத்துவம் அளித்து உள்ளது. அதன் காரணமாகவே நிறைய கோப்புகள் மொத்தமாக வந்து இறக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications