தமிழகத்தில் பல வருடங்களாக முன்னோடி திட்டமாக இருக்கும் மகப்பேறு விடுமுறை திட்டத்தை போலவே மத்திய அரசும் திட்டம் கொண்டு வந்து இருக்கிறது.
டெல்லி: தமிழகத்தில் பல வருடங்களாக முன்னோடி திட்டமாக இருக்கும் மகப்பேறு விடுமுறை திட்டத்தை போலவே மத்திய அரசும் திட்டம் கொண்டு வந்து இருக்கிறது. ஆனால் இது தமிழக அரசின் திட்டம் போல நிறைய சலுகைகள் கொண்டது கிடையாது.
மத்திய பாஜக அரசு இன்று லோக்சபாவில் தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இடைக்கால பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
இதில் பியூஸ் கோயல் பெண்களின் நலனுக்காக நிறைய திட்டங்களை கொண்டு வந்தார். சில திட்டங்கள் தமிழகத்தை பிரதி எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
எத்தனை வாரங்கள்
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் பெண்கள் நலனுக்கான முத்ரா திட்டத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. பணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு பாஜக ஆட்சியில் 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டது குறித்து பியூஷ் கோயல் இதில் மகிழ்ச்சி தெரிவித்தார். பெண்களுக்கு இந்த விடுமுறை பெரிய அளவில் உதவும் என்று பாஜக கூறியுள்ளது.
எப்போது கொண்டு வந்தது
இந்த சட்டம் கடந்த 2017ம் ஆண்டே கொண்டு வரப்பட்டது. அப்போதே இதற்காக மத்திய அரசு மாநிலங்களவையில், மக்களவையில் சட்டம் கொண்டு வந்தது. இது பெரிய அளவில் பலன் அளித்து இருப்பதாக நிதியமைச்சர் இன்று பெருமையாக குறிப்பிட்டார்.
தமிழகம் நிலை
ஆனால் தமிழகம் இதை எல்லாம் பல வருடங்களுக்கு முன்பே தாண்டிவிட்டது. 2016லேயே இதைவிட சிறப்பான சட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை காலம் 9 மாதமாக உயர்த்தப்பட்டு மூன்று வருடங்களாக நடைமுறையில் உள்ளது.
அப்போதே முன்னோடி
தமிழகத்தில் அதற்கு முன் மகப்பேறு விடுமுறை 6 மாதங்களாக இருந்தது. 2016ல் இது 9 மாதமாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தமிழகம் மத்திய அரசுக்கு இதிலும் கூட முன்னோடி என்பது நிரூபணம் ஆகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications