பட்ஜெட்டினை வரவேற்று எச்.ராஜா ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
சென்னை: பட்ஜெட்டில் ஏகப்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டு நாட்டையே மிரள வைத்துள்ள பாஜகவை பாராட்டியும், காங்கிரசை தாக்கியும் எச்.ராஜா ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
3 மாநிலங்களில் ஆட்சியை பாஜக இழந்திருக்கும் நிலையில் மத்திய பாஜக அரசு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த வகையில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது.
யாரெல்லாம் இந்த நான்கரை வருஷம் அவதிப்பட்டார்களோ, யாரெல்லாம் மிகுந்த தொல்லைகளுக்கும், ஆளானார்களோ அவர்களை சாந்தப்படுத்தவே இந்த பட்ஜெட்டின் அறிவிப்புகள் உள்ளன.
பாஜக தலைவர்கள்
குறிப்பாக விவசாயிகள், நடுத்தர மக்களை குறி வைத்து ஒவ்வொரு அறிவிப்பும் இன்று வெளியானது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பாஜக தலைவர்கள் குஷியாகி வரவேற்று இருக்கிறார்கள்.
எச்.ராஜா
இதில் எச்.ராஜா ஒரு படி மேலே போய் நிற்கிறார். "கண்ணில் பயம் தெரியுதே" என்று ஒற்றைவரி ட்வீட் போட்டுள்ளார்.
யாரை சொல்கிறார்?
ஆனால், "கண்ணில் பயம் தெரியுதே" என்று எச்.ராஜா யாரை சொல்கிறார், யார் பயந்து கிடக்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. வெறும் சலுகைகளை இப்படி அறிவித்து விடுவதால் மட்டுமே காங்கிரஸ் தரப்பு பயந்து நடுங்கிவிடும் என்று எச்.ராஜா நம்புகிறாரா? அல்லது 3 மாநில தேர்தல் தோல்விகளை போல வரும் தேர்தலிலும் மண்ணை கவ்வக்கூடாது என்ற பயம் காரணமாகவே இத்தனை அறிவிப்புகளையும் பாஜக அறிவித்தது என்று எச்.ராஜா நம்புகிறாரா என்று தெரியவில்லை.
மூத்த தலைவர்
ஆனால், அறிவிப்புகளில் என்ன இருக்கிறது, யார் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் அறிவித்து விட்டு போகலாம் என்பதும், ஆனால் அவற்றினை செயல்படுத்தும்போதுதான் நடைமுறை சிக்கல்களும், அறிவிப்பின் சாத்தியங்களும் வெளிப்படும் என்பதும் மூத்த தலைவரான எச்.ராஜாவுக்கு தெரியாமல் இருக்குமா என்ன?!
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications