ஒட்டு மொத்தமாக நான் நாட்டை வளர்க்கிறேன் எனச் சொல்வது எல்லாம் ஒரு பக்கம் இருக்க... மக்களுக்கு மத்திய அரசால் கொடுக்க முடிந்த சில அதிரடி நிவாரணங்களை அறிவித்திருக்கிறார். உண்மையாகவே தனி நபர்களுக்கு பெரிய சதோஷம் தான்
எல்லாம் வரி தான்
1. 5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி செலுத்த வேண்டாம்
2. 80சி பிரிவு 1.5 லட்சமாகவே தொடர்கிறது.
3. போக்குவரத்து மற்றும் மருத்துவச் செலவுகளுக்கான நிலையான கழிவுகள் 40,000-ல் இருந்து 50,000 ஆக உயர்வு.
இந்த வருஷம் வரை
ஒரு நபர் மாதம் 50,000 ரூபாய் சம்பாதிக்கிறார் என்றால் ஆண்டுக்கு 6,00,000 ரூபாய் வரை வருமானம் வரும். அடிப்படையான வரிக் கழிவான 2.5 லட்சம் ரூபாய் போக மீதமுள்ள தொகையான 3.5 லட்சத்துக்கு வரி செலுத்த வேண்டும். அப்படி வரி செலுத்தத் தயாராக இல்லை என்றால் 1.5 லட்சம் ரூபாய் வரை ஒழுங்காக எதாவது முதலீட்டுத்திட்டங்களில் விருப்பம் இன்றி முதலீடு செய்ய வேண்டும்.
2017 - 18 நிதி ஆண்டுக்கு
இதுவரை ஆண்டுக்கு 7,00,000 ரூபாய் சம்பாதித்துக் கொண்டிர்ருந்தவர்கள் பழைய கணக்கீடுகள் (Standard Deduction மற்றும் 80C கழித்த பின்) 15,100 ரூபாயை வருமான வரியாகச் செலுத்த வேண்டும். ஆனால் இப்போது புதிய அறிவிப்புகள் படி 7,00,000 ரூபாய் வரை ஒரு ரூபாய் கூட வரி செலுத்தத் தேவை இல்லை.
கணக்கீடு
ஒட்டு மொத்தத்தில் ஒரு சம்பள தாரர் 7 லட்சம் ரூபாய் சம்பளமாகப் பெற்றால் கூட வரி செலுத்தத் தேவை இல்லை. முதல் 5 லட்சம் ரூபாய் வருமான வரி வரம்பிலேயே கழிந்து விடும். அடுத்த 50,000 ரூபாய் நிலையான போக்குவரத்து மற்றும் மருத்துவ கழிவுகளில் கழித்துக் கொள்ளலாம். அதன் பின் அலுவலகத்தில் பிடித்தம் செய்யும் பிஎஃப் தொடங்கி நாம் விருப்பப்படி செய்யும் முதலீடுகளுக்கான வரம்பு 1.5 லட்சம் ரூபாய். ஆக மூன்றையும் கூட்டினால் 7 லட்சம் ரூபாய் வரை ஒரு சம்பள தாரர் வரி செலுத்த வேண்டாம்.


Click it and Unblock the Notifications