பட்ஜெட்டைக் குறை சொல்லும் படலத்தை நாளை வரை ஒத்திப் போடவில்லை. உடனடியாகத் தொடங்கிவிட்டார்கள். ஆம் சில மணி நேரங்களுக்கு முன் பியுஷ் கோயல் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தங்களுக்குப் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என கொடிபிடிக்கத் தொடங்கிவிட்டது ஐஐடி, ஐஐஎம், ஐஐஎஸ்சி போன்ற இந்தியாவின் முன்னனிக் கல்வி நிறுவனங்கள்.

இடஒதுக்கீடு
Reservation
சில வாரங்களுக்கு முன்பு தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மோடிஜி ஆதிக்க சாதியினரில் ஆண்டு வருமானம் எட்டு லட்சம் ரூபாய்க்குக் கீழ் இருப்பவர்களுக்கு இனி மத்திய அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு போன்ற தளங்களில் 10 சதவிகிதம் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான உடனேயே அனைத்து முன்னனி அரசு கல்வி மையங்களுக்கும் தான் வைத்திருக்கும் இடங்களை 25% அதிகரிக்கச் சொன்னது மத்திய அரசு.
காசு எங்கே
Funds to increase seats
மத்திய அரசு சொன்னதும் ஐஐடி மற்றும் ஐஐஎம்-களும் அதிகரிக்கத் தயாராகத் தான் இருந்தது. ஆனால் அதற்கான நிதி எங்கே என இப்போது ஐஐடி மற்றும் ஐஐஎம் மத்திய அரசிடமே கேட்டிருக்கிறது.
ஐஐடி
Indian Institute of Technology
2019 - 20 நிதி ஆண்டில் ஐஐடிக்களுக்கு மொத்தமாக 6223 கோடி கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கி இருக்கிறதாம். 2018 - 19 நிதி ஆண்டில் 6,326 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முந்தைய ஆண்டில் (2017 - 18)-ல் 8,337 கோடி ரூபாய் ஒதுக்கபப்ட்டதாம். இப்படி தொடர்ந்து நிதியைக் குறைத்து வந்தால் இருக்கும் மாணவர்களுக்கே தேவையானதைச் செய்ய முடியவில்லை இதில் எப்படி புது மாணவர்களுக்கான இடங்களைத் தயார் செய்ய முடியும்.
ஐஐஎம்
Indian Institute of Management
இந்திய மேனேஜ்மெண்ட் கல்லூரிகளிலேயே சிறந்த கல்லூரிகளான ஐஐஎம்களுக்கும் அரசு தான் நிதி உதவி அளித்து வருகிறது. இந்த 2019 - 20 நிதியாண்டுக்கு 415.41 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கி இருக்கிறது. இதற்கு முந்தைய 2018 -19 நிதி ஆண்டில் 1036 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்ததாம். சுமார் 60 சதவிகிதம் நிதி குறைவாக ஒதுக்கி இருக்கிறார்களாம்.
ஐஐஎஸ்இஆர்
Indian Institute of Science, Education and Research
இந்திய அறிவியல் கல்லூரிகளில் தலை சிறந்த கல்லூரிகளில் ஒன்றான இந்த நிறுவனத்துக்கும் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லையாம். 2019 - 20 நிதி ஆண்டில் 660 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கி இருக்கிறார்களாம். கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் இதே நிறுவனத்துக்கு 689 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்களாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications