Budget 2019: முந்தைய இடைக்கால பட்ஜெட்களின் சிறப்பம்சங்கள் என்ன?..முக்கிய சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ
டெல்லி: மத்திய இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். இதற்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டுகளில் ஏற்பட்ட சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்புகளை பார்ப்போம்.
லோக் சபா தேர்தலுக்கு முன்பு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தாக்கல் செய்யும். விவசாயிகள் முதல் சாதாரண குடிமகன் வரை மிகவும் எதிர்பார்க்கப்படும் பட்ஜெட்டாக இது அமையவுள்ளது.

இதற்கு முன்னர் நிதியமைச்சர்களாக இருந்த ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி மற்றும் ஜஸ்வந்த் சிங் உள்ளிட்டோர் அவரவர் சார்ந்த கட்சிகளின் சார்பில் அவரவர் ஆட்சி காலத்தில் இடைக்கால பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தனர். அந்த வகையில் முந்தைய இடைக்கால பட்ஜெட்டுகள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பார்ப்போம்.
- இடைக்கால பட்ஜெட்டின் போது வரிகளில் கணிசமான மாற்றங்களை கொண்டு வந்த முதல் நிதியமைச்சர் ப. சிதம்பரம்.
- தற்போதைய பொருளாதார நிலையில் முறையான பட்ஜெட் தாக்கல் செய்யும் வரை காத்திருக்க கால அவகாசம் இல்லாததால் இந்த பட்ஜெட்டிலேயே அனைத்தையும் அறிவிக்க வேண்டி உள்ளது என்று ப.சிதம்பரம் கடந்த 2014-ஆம் ஆண்டு கூறியிருந்தார்.
- கடந்த 2014- 15-ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டின் போது மறைமுக வரிச் சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தவர் சிதம்பரம். இதன் மூலம் செல்போன்கள், தொழிற்சாலைக்கான எண்ணெய்கள், ஆட்டோமொபைல் பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்தது.
- அரிசியை சேமிப்பது, பேக்கிங் செய்வது, லோடிங், அன்லோடிங் ஆகியவற்றுக்கு சேவை வரியை விலக்க உத்தேசித்தார்.
- பாதுகாப்பு படையினருக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற திட்டத்தின் கோட்பாட்டை ஏற்றுக் கொண்ட சிதம்பரம், அடுத்த நிதியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என கூறியிருந்தார்.
- நிதி தாக்கங்கள் மீது ப.சிதம்பரம் மட்டும் முக்கிய மாற்றங்களை கொண்டு வரவில்லை. மற்றவர்களும் கொண்டு வந்தனர்.
- கடந்த 2009-10-ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டின் போது நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, 2 சதவீத ஏற்றுமதி கடன்களுக்கான கால அவகாசத்தை 6 மாதங்கள் நீட்டித்தார்.
- பொதுத் துறை மற்றும் தனியார் துறை திட்டங்களுக்கு 60 சதவீதம் வரை மறு கடன் அளிக்கும் திட்டத்தை உத்தேசித்தார்.
- கடந்த 2004-05-ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த ஜஸ்வந்த் சிங், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் 50 சதவீதத்தை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க திட்டமிட்டார்.
- விவசாய வருமான காப்பீட்டு திட்டத்தை 20 மாவட்டங்களில் இருந்து 100 மாவட்டங்களுக்கு நீட்டிக்கவும் ஜஸ்வந்த் உத்தேசித்திருந்தார்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications