இன்று காலை வர்த்தகமாகத் தொடங்கியதில் இருந்தே ஒரு நிலையாக வர்த்தகமாகி வந்த சந்தை பட்ஜெட் அறிவிக்கும் 11 மணி தொடங்கி மதியம் ஒரு மணி வரை கொஞ்சம் ஏற்றத்திலேயே வர்த்தகமானது. பட்ஜெட் அறிவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அதிகபட்சமாக நிஃப்டி 10,979 புள்ளிகள் வரை உயர்ந்தது. சென்செக்ஸ் 36,767 புள்ளிகள் வரை உயர்ந்தது. பட்ஜெட் முடிந்த உடன் சந்தையும் தான் பாட்டுக்கு கீழே இறங்கி வழக்கம் போல கொஞ்சம் நிலையாக வர்த்தகமாயின.
என் எஸ் இ
நிஃப்டி காலை 10,851 க்கு வர்த்தகமாகத் தொடங்கி தற்போது 62 புள்ளிகள் அதிகரித்து 10,893க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நிஃப்டி 50யில் இருக்கும் 50 பங்குகளில் 34 பங்குகள் ஏற்றத்திலும், 16 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.
பி எஸ் இ
சென்செக்ஸ் காலையில் 36,311 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி தற்போது 220 புள்ளிகள் அதிகரித்து 36,476 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. சென்செக்ஸில் 22 பங்குகள் ஏற்றத்திலும், 08 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-ல் பட்டியலிடப்பட்டிருக்கும் மொத்த பங்குகளில் 2,677 பங்குகள் மட்டுமே இன்று வர்த்தகமாயின. அதில் 1,203 பங்குகள் ஏற்றத்திலும், 1332 பங்குகள் இறக்கத்திலும், 142 பங்குகள் விலை மாற்றம் இன்றியும் வர்த்தகமாயின.
டாலர் Vs இந்திய ரூபாய்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கொஞ்சம் வலுவடைந்து தற்போது 71.27 என்கிற விலைக்கு வர்த்தகமாகி வருகிறது. நேற்று ரூபாயின் மதிப்பு 71.07 -க்கு வர்த்தகம் நிறைவடைந்தது.
அதிக விலை மாற்றப் பங்குகள்
ஹிரோமோட்டோகார்ப், மாருதி சுஸிகி, ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ், ஈஷர் மோட்டார்ஸ் ஏஷியல் பெயிண்ட்ஸ் போன்ற நிறுவன பங்குகள் நல்ல லாபத்தில் வர்த்தகமாயின. வேதாந்தா, ஜீ எண்டர்டெயின்மெண்ட் யெஸ் பேங்க், எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க் போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின.
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா
அமெரிக்க சந்தை நேற்று ஏற்றத்தில் வர்த்தகமாகி நிறைவடைந்து இருந்தது. அதோடு லண்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாட்டுச் சந்தைகள் (ஐரோப்பிய பங்குச் சந்தைகள்) இன்று ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. ஆசியச் சந்தைகளில் ஜப்பானின் நிக்கி, தைவான் நாட்டின் தைவான் வெயிடெட், எஸ் இ டி காம்போஸைட், இந்தோனேஷியாவின் ஜகர்தா காம்போசைட், சீனாவ்ன் ஷாங்காய் காம்போசைட் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த எஸ்ஜிஎக்ஸ் நிஃப்டி ஆகிய சந்தைகள் ஏற்றாத்தில் வர்த்தகமாகி வருகின்றன. மற்ற சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
ஆக பட்ஜெட்டினால் சந்தை பெரிய அளவில் அதிகரிக்கவோ அல்லது குறையவோ இல்லை. சொல்லப் போனால் சந்தைக்கும் பட்ஜெட்டுக்கும் சம்பந்தமே இல்லாதது போல் தான் இன்று வர்த்தகமாகி இருக்கிறது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications