டெல்லி:மத்திய நிதி அமைச்சர் இன்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் ஒரு தேர்தல் பட்ஜெட் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக்குறைவின் காரணமாக அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். மின்துறை அமைச்சரான பியூஷ் கோயல் நிதித்துறையினை கூடுதல் பொறுப்பாக ஏற்று, இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.

லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசின் இந்த பட்ஜெட் விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர், ஊரக மக்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது மோடி அரசிற்கு நடத்தப்பட்ட சோதனையாகவே பார்க்கப்பட்டது.
தேர்தல் வரும் காலம் என்பதால் அனைத்து தரப்பு வாக்குகளையும் குறிவைத்து பட்ஜெட்டில் நிறைய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளை கொச்சைப்படுத்துவது போன்று சில அறிவிப்புகள் இருப்பதாக ராகுல் காந்தியும், காங்கிரசும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. அதே நேரத்தில், இடைக்கால பட்ஜெட் சிறப்பான தரமான பட்ஜெட் என்று பியூஸ் கோயலை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இந்நிலையில் பட்ஜெட் குறித்து முன்னாள் பிரதமரும், சிறந்த பொருளாதார மேதையுமான மன்மோகன் சிங் கடுமையாக கருத்துகளை முன் வைத்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது :நடைபெற உள்ள தேர்தலை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்.
இது ஒரு தேர்தல் பட்ஜெட். விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு அளித்துள்ள சலுகைகள் தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டது என்பது வெளிப்படையாக தெரிகிறது என்றும் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications