இடைக்கால பட்ஜெட்டின் அம்சங்கள் முன்கூட்டியே லீக்.. ஆதாரங்களுடன் மணிஷ் திவாரி குற்றச்சாட்டு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டின் சில அம்சங்கள் லீக்கானதாக காங்கிரஸ் கட்சி பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

 

நாடாளுமன்ற தேர்தல் வரும் மே மாதம் நடைபெறவுள்ளது. அடுத்த ஆட்சி அமையும் வரை அரசு ஊழியர்களுக்கான நிதி, திட்டங்களுக்கான நிதி உள்ளிட்டவைகளை ஒதுக்குவதும் புதிய திட்டங்களை அறிவிப்பதுமே தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட்டாகும் (இடைக்கால பட்ஜெட்).

இடைக்கால பட்ஜெட்டின் அம்சங்கள் முன்கூட்டியே லீக்.. ஆதாரங்களுடன் மணிஷ் திவாரி குற்றச்சாட்டு

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிக் காலம் வரும் மே மாதம் முடியவுள்ளது. இடைக்கால பட்ஜெட்டை இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் இன்று தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. இது நடுத்தர, விவசாயிகள், தொழில் முனைவோர் உள்ளிட்டோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் பட்ஜெட்டின் சில அம்சங்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னரே ஊடகங்களுக்கு லீக்கானதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மனிஷ் திவாரி குற்றச்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு கூறுகையில், மேற்கண்ட விஷயங்கள் ஊடகங்களுக்கு முன் கூட்டியே அளிக்கப்பட்டுள்ளன. டுவிட்டரில் நான் வெளியிட்ட புகைப்படங்களில் உள்ள திட்டங்களுக்கு இத்தகைய நிதி ஒதுக்கப்பட்டிருப்பது பட்ஜெட்டில் எதிரொலித்தால் அது நிச்சயம் பட்ஜெட் அம்சங்கள் லீக்கானதற்கு வழிவகுக்கும் இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Manish Tiwari alleges parts of the budget has been leaked

Congress leader Manish Tewari has taken to Twitter to attach photographs and allege that parts of the budget has been leaked to the media.
Story first published: Friday, February 1, 2019, 10:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X