60 வயதுக்கு பிறகு ரூ. 3000 பென்ஷன்.. மத்திய அரசின் மெகா பென்ஷன் திட்டம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: 60 வயதுக்கு பிறகு ரூ. 3 ஆயிரம் பென்ஷன் வழங்கப்படும் என மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

16 ஆவது மக்களவையின் கடைசி மற்றும் 6-ஆவது பட்ஜெட்டை நிதியமைச்சர் (பொறுப்பு) பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். அப்போது தெலுங்கு தேசம் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

60 வயதுக்கு பிறகு ரூ. 3000 பென்ஷன்.. மத்திய அரசின் மெகா பென்ஷன் திட்டம்

அந்த அமளிக்கு மத்தியில் பியூஷ் கோயல் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அவர் கூறுகையில் பிரதம மந்திரி ஷிராம் யோகி மந்தன் என்ற ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பென்ஷன் போய் சேர உள்ளது. இதன்படி மாதம் 100 ரூபாய் பிரீமியம் செலுத்தினால் ஓய்வூதியமாக குறைந்தபட்சம் ரூ.3000 பெறுவார்கள்

60 வயதுக்கு பிறகும் மாதம் ரூ . 3000 பென்ஷன் கிடைக்கும். 29 வயதில் பென்ஷன் திட்டத்தில் சேருவோர் மாதம் 100 செலுத்தினால் போதும். 19 வயதில் பென்ஷன் திட்டத்தில் சேருவோர் 55 ரூபாய் செலுத்தினால் போதும். இந்த உதவித்தொகையால் 10 கோடி பேர் பயன்பெறுவர்.

பணியாளர்கள் செலுத்தும் தொகைக்கு ஈடாக மத்திய அரசு பணம் செலுத்தும். பணியின்போது இறக்கும் தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ. 6 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும். தொழிலாளர்களுக்கு பணிக் கொடை வரம்பு ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ. 30 லட்சமாக உயர்த்தி வழங்குப்படுகிறது என்றார் கோயல்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mega Pension Scheme announced by Central government

Mega Pension Yojana to provide assured monthly pension of 3000 rupees per month with contribution of 100 rupees per month for workers in unorganized sector after 60 years of age.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X