சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் தொடங்கி அடி மட்டத் தொண்டன் வரை கருப்புச் சட்டை அணிந்து மோடியின் கடைசி மற்றும் இடைக்கால பட்ஜெட்டுக்கு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளாக தன் டிரேட் மார்க் முழுக்கை கதர் சட்டையில் இருந்து மாறி கருப்புச் சட்டை அணிந்து போட்டுக்களுக்கு போஸும் கொடுத்திருக்கிறார் சந்திர பாபு நாயுடு.

ஆந்திர மாநிலத்துக்கு தருவதாகச் சொன்ன சிறப்பு மாநில அந்தஸ்து தாரதது, ஆந்திரப் பிரதேசத்தை மாற்றாம் தாய் மனப்பான்மையோடு அணுகுவது போன்ற பிரச்னைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கறுப்புச் சட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்களாம்.
மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் இருக்கும் ஆந்திர எம்பிக்கள் அனைவருமே கருப்புச் சட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பை வலுவாக பதிவுச் செய்திருக்கிறார்கள். அதையும் ட்விட்டரில் பதிவுச் செய்திருக்கிறார்கள்.
அதை தெலுகு தேசம்கட்சியின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கம் உறுதி செய்திருக்கிறது:


Click it and Unblock the Notifications