பட்ஜெட் 2019: மோடி செம குஷி .. மேசைகளை தட்டித் தட்டி ரசித்தார்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்த பட்ஜெட் தன் அரசு மீதான எல்லா குறைகளையும், கறைகளையும் அகற்றிவிடும் என்று பிரதமர் மோடி நம்புகிறாரா என தெரியவில்லை... நிதி அமைச்சர் பட்ஜெட்டை வாசிக்க வாசிக்க.. முகம் முழுவதும் அப்படி ஒரு பூரிப்பு!

 

மத்திய அரசு தன்னுடைய ஆட்சிக்காலத்தின் கடைசி கால இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறது. இந்த நான்கரை வருடங்களில் போதுமான அளவுக்கு கெட்ட பெயரை மத்திய அரசு சம்பாதித்து கொண்டது.

அதன் ஒட்டுமொத்த பலனும் 5 மாநில தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டுவிட்டது. நான்கரை வருடமாக உணராத பாஜகவுக்கு 5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பிறகுதான் உண்மை நிலையை அறிந்தது.

பட்ஜெட்டில் குறி

பட்ஜெட்டில் குறி

இதனை அகற்றவும், மத்திய அரசு மீதான நல்லெண்ணத்தை பரப்பவும் பட்ஜெட்டை குறி வைத்தது. இன்னும் 5 மாதங்களே உள்ள ஆட்சி, வரவுள்ள தேர்தலில் வெற்றிவாய்ப்பை பெறுவதற்காக இந்த பட்ஜெட் அறிவிப்பின் மூலம் காய் நகர்த்த துவங்கி உள்ளது.

எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகள்

நிதி அமைச்சர் அருண்ஜெட்லிக்கு உடம்பு சரியில்லாததால், பியூஸ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது ஒவ்வொரு முக்கிய அறிவிப்பின்போதும், மோடியின் ரியாக்‌ஷனை சபையில் உள்ளவர்கள் உன்னிப்பாக கவனித்தனர். ஒரு பக்கம் பட்ஜெட் அறிவிப்பினை பியூஸ் கோயல் வாசிக்க, மறு பக்கம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகள் நிறைந்து சத்தம் போட, எதையுமே காதில் வாங்கி கொள்ளாமல் படு குஷியாக காணப்பட்டார் மோடி.

டேபிளை தட்டினார்
 

டேபிளை தட்டினார்

அதிலும் முக்கியமான அறிவிப்புகள் எது வந்தாலும், மோடி உற்சாகத்துடன் கைதட்டி வரவேற்றார். ஆனால் அதற்கு மேல் உமாபாரதி ஒரு படிமேல போய், தன் இரு கைகளாலும் டேபிளை தட்டி தட்டி ஆரவாரமே செய்ய ஆரம்பித்துவிட்டார்.

இளம் வயது

இளம் வயது

மிக குறைந்த நாளில் தயாரிக்கப்பட்ட இந்த பட்ஜெட்டை, மிக குறைந்த வயதில் தாக்கல் செய்பவர் என்ற பெருமையை பெற்றுள்ள பியூஸ் கோயல், எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பை பொருட்படுத்தவே இல்லை. எதிராக முழக்கமிட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பட்ஜெட்டை வாசிப்பதிலேயே குறியாக இருந்தார் பியூஸ் கோயல். ஒரு பக்கம் மோடி கை தட்ட, உமாபாரதி மேஜையை தட்ட, பட்ஜெட் அரங்கேறியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi's expression during budget announcement

When Finance Minister Piyush Goyal announced the budget, PM Modi gladly welcomed it.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X