டெல்லி: பட்ஜெட் குறித்து டுவிட்டரில் ஒரு கணக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. இதை கூட்டி கழித்து எப்படி பார்த்தாலும் குழப்பமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்பட்டு புதிய ஆட்சி பொறுப்பேற்கும்.
பல்வேறு திட்டங்கள்
இந்த நிலையில் தற்போதைய அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் (பொறுப்பு) பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். அவர் இன்று பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
எத்தனை கோடி வரவு
இந்த திட்டங்களுக்காக ஒரு நாளைக்கு ரூ. 7627 கோடி ரூபாயை செலவு செய்யும் என்றும் அரசுக்கு ஒரு நாளைக்கு கிடைக்கும் வருமானமோ ரூ. 5418.33 கோடி என்றும் அவர் கூறியிருந்தார்.
கணக்கு
இந்த நிலையில் பட்ஜெட் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் உலவுகின்றன. அதில் பியூஷ் சொன்ன கணக்கை வைத்து ஆராய்ச்சிகள் எல்லாம் நடந்து வருகின்றன.
கணக்கு வழக்குகள்
அதாவது ஒரு நாளைக்கு அரசுக்கான செலவு ரூ. 7626 கோடி
ஒரு நாளைக்கு அரசுக்கு வருமானம் ரூ 5418.33 கோடி
ஆக அரசு திட்டங்களை செயல்படுத்த நாள் ஒன்றுக்கு 1928.76 கோடி கடன் வாங்க வேண்டியிருக்கும். அதாவது ஒரு மணி நேரத்துக்கு ரூ. 80.36 கோடி கடன் பெற்றே தீரவேண்டும் என்று டுவிட்டரில் கணக்கு வழக்குகள் உலவுகின்றன.


Click it and Unblock the Notifications