டெல்லி: இரண்டாவது வீடு வாங்குபவர்களுக்கும் வரிச்சலுகை அளிக்கப்படும் என் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.
2019ம் ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதால் என்னவோ... மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு இடைக்கால பட்ஜெட்டை தேர்தல் அறிக்கை போன்றே மாற்றிவிட்டது. எதிர்க்கட்சிகள் என்னதான் எதிர்ப்பு நிலை எடுத்து முழக்கமிட்டாலும் அசராமல் பல அறிவிப்புகளை அறிவித்துவிட்டிருக்கிறது பாஜக அரசு.
நான்கரை ஆண்டு காலமாக எதிர்பார்த்து வந்த வருமானவரி உச்ச வரம்பும் அறிவிக்கப்பட்டுவிட்டது. மீன்வளத் துறைக்கு தனி அமைச்சகம், நிரந்தர கழிவு வரம்பு என அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது பாஜக அரசு.
வீட்டுக்கடன்
பொதுவாவே... வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார் என்பது நமது வாழ்க்கை முறையில் அனைவரும் பெரும்பாலும் பயன்படுத்தும் வார்த்தை. கடனை வாங்கி கனவு இல்லத்தை வாங்கிய பின், மாதத் தவணையை சமாளிக்க பிற செலவுகளை கட்டுப்படுத்தி கொள்வதே வழக்கம்.
வருமான வரியில் சலுகை
வருமான வரியில் சலுகை என்பது வரை மட்டுமே நமது நிதி சார்ந்த சிந்தனை இருக்கும், ஆனால் வீட்டுக் கடன் வாங்கும் போது இதற்கும் மேற்பட்டு பல அறிந்திராத வரிச் சலுகைகள் உள்ளது. வீடு கட்டுபவர்கள்... கடன்.. வரி விலக்கு போன்ற விஷயங்கள் ஏதோ பெரும் மாயாஜாலம் என்று நினைப்பது உண்டு.
நிபந்தனைகளுடன் வீட்டுக்கடன்
பொதுவாக... வருமான வரி சட்டத்தில் பிரிவு 24, 80C, 80EE ஆகியவற்றின் படி திரும்ப செலுத்துப்படும் வீட்டுக் கடனில் அசல் மற்றும் வட்டி ஆகிய இரண்டிற்கும் வரி விலக்கு, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அளிக்கப் படுகிறது. ஒரு நபரால் பல வீட்டுக் கடன்களை பெறமுடியும்.
கடன் வாங்கலாம்
இருப்பினும் இரண்டாவது வீட்டின் கடனுக்கான வட்டி மீதான வரி நன்மைகள், முதல் வீட்டின் வீட்டுக்கடன் வட்டியை விட வேறுபட்டிருக்கும். ஒருத்தர் எவ்வளவு சொத்துக்கள் வேண்டும் என்றாலும் வைத்துக்கொள்ளலாம், ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டுக்கடன் மட்டும் வாங்க முடியாது என்பதில் உண்மை இல்லை.
இடைக்கால நிதிநிலை அறிக்கை
ஒருவருக்கு சொந்தமான சொத்து அல்லது சொத்துக்கள் வாடகைக்கு விடப் பட்டிருந்தால், அத்தகைய சொத்துக்களை பொறுத்தவரை, வாடகைக்கு எந்த வித மேல் உச்சவரம்பும் இல்லாமல், முழு வட்டிகுறைப்புக்கு உரிமை கோரலாம் என்று நடைமுறை இருந்து வருகிறது. தற்போது மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் வீட்டுக்கடன், வரிச்சலுகை ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
2வது வீட்டுக்கும் சலுகை
வீடு வாங்குதல், அதனை வாடகைக்கு விட்டு பொருள் தேடுதல் போன்றவை இருந்தாலும்.. தற்போதைய பட்ஜெட்டில் 2வது வீடு வாங்குபவர்களுக்கும் வரிச் சலுகை அளிக்கப்படும் என்று அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் வழியாக... இனி 2வது வீடு வாங்குபவர்களுக்கு வருமான வருமான வரியில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்சவரம்பு அதிகரிப்பு
இனி 2 வீடுகளுக்கு இனி வீட்டுக்கடன் சலுகை அளிக்கப்படும். அதே போன்று... வீட்டு வாடகை கழிவுக்கான உச்ச வரம்பானது 1.80 லட்சத்தில் இருந்து 2.40 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. குருவி போன்று சேமித்து வைத்து கனவு இல்லத்தை வாங்கும் மக்களுக்கு ... சிறிய சலுகைகள் கிடைத்தாலும் அவர்கள் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. ஆனால் தற்போது.. 2வது வீடு வாங்குபவர்களுக்கும் வரிச்சலுகை, வீட்டு வாடகையிலிருந்து வரும் வருமானத்திற்கு வரிச்சலுகை 1.8 லட்சத்திலிருந்து 2.4 லட்சம் உயர்வு என்பது இனிப்பான செய்தி.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications