தனி நபருக்கு இத்தனை சலுகைகளா..? சபாஷ் கோயல்.. கலக்கிட்டீங்க..!
பாரதிய ஜனதா கட்சியின் தொடக்கத்தில் 2014 தான் இரண்டு லட்சம் ரூபாயாக இருந்த வருமான வரி வரம்பு, 2,50,000 ரூபாய்க்கு அதிகரிக்கப்பட்டது. இப்போது அதை 5,00,000 வரை கழிவு கொடுத்திருக்கிறார்கள்.
போக்குவரத்துச் செலவுகள் மற்றும் மருத்துவச் செலவுகளுக்கு வழங்கப்படும் ஸ்டாண்டர்டு டிடக்ஷன் 40,000 ரூபாயில் இருந்து 50,000 ரூபாயாக அதிகரித்திருக்கிறார்கள்.

ஆனால் 80சி பிரிவுக்கான வரிக் கழிவுகள் 1.5 லட்சத்தில் எந்த மாற்றமும் கொண்டு வரப்படவில்லை. கடந்த 2017 - 18 நிதியாண்டில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மற்ரும் வரி வருவாய் அதிகரித்திருப்பதால் இது சாத்தியமாகி இருக்கிறதாம்.
ஆக மாதம் 50,000 சம்பளம் வாங்குபவர்கள் கூட இனி வருமான வரி செலுத்தத் தேவை இல்லை.


Click it and Unblock the Notifications