தம்பி பாஜக தான் டாப்பு, மத்தது எல்லாம் டூப்பு..? இங்க பாரு ஆதாரத்த..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பியுஷ் கோயல் பட்ஜெட் தாக்கல் செய்த போது சில விஷயங்களை நன்றாக கவனிக்க முடிந்தது. 1. தன் கட்சியின் சாதனைகளை தம்பட்டம் அடித்துக் கொள்ளுதல். 2 .எதிர்கட்சியின் ஆட்சிக் காலங்களை வெளிப்படியாக மட்டம் தட்டுவது என் பட்டியல் தொடர்கிறது. அதில் பொருளாதார பணவீக்கம், நிதிப் பற்றாக்குறை, நடப்புக் கணக்கு பற்றாக்குறை, வாராக் கடன்கள் பிரச்னை, அந்நிய நேரடி முதலீடு என பல எண்களை காட்டி குற்றம் சாட்டுகிறார்.

 

பொருளாதார பணவீக்கம்

பொருளாதார பணவீக்கம்

பியுஷ் கோயல் தன்னுடைய 7-வது கருத்தாக பணவீக்கத்தை பாஜக மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறது என பேசினார். "2009 - 2014 கால கட்டங்களில் பணவீக்கம் 10.1 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இப்போது டிசம்பர் 2018-ல் பணவீக்கத்தை 2.19 சதவிகிதமாக கட்டுக்குள் வைத்திருக்கும். எங்கள் ஆட்சிக்காலத்தில் சராசரியாக பணவீக்கம் 4.6 சதவிகிதமாகவே கட்டுப்படுத்தி வைத்திருக்கிரோம். இதுவரை எந்த ஒரு அரசின் காலத்திலும் இத்தனை நிலையாக பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கவில்லை.

Fiscal deficit

Fiscal deficit

இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை 2013 - 14 நிதியாண்டில் 6.0 சதவிகிதமாக இருந்தது. ஆனால் கடந்த 2018 - 19 நிதியாண்டில் மறு மதிப்பீடு செய்யப்பட்ட நிதிப் பற்றாக்குறை 3.4 சதவிகிதமாகவே இருக்கிறது என்றார். அதே போல் நடப்புக் கணக்கு பற்றாக்குறையிலும் காங்கிரஸின் 2013 - 2014 ஆட்சிக் காலத்தில் 5.6 சதவிகிதமாக இருந்தது. அதையும் கட்டுப் படுத்தி தற்போது 2.5 சதவிகிதமாக வைத்திருக்கிறோம் என்கிறார்.

Foreign Direct Investment
 

Foreign Direct Investment

கடந்த ஐந்து ஆண்டுகளில் வழங்கிய நல்ல ஆட்சிக்கு சாட்சியாக வெளிநாடுகளில் இருந்து 239 பில்லியன் டாலருக்கு முதலீடுகள் வந்திருக்கின்றன. அதோடு வெளிநாட்டு முதலீடுகள் கொள்கைகளில் தாராளமாகவே செயல்பட்டதற்கு இந்த முதலீட்டு தொகையே சாட்சி என்கிறார்.

non performing Assets

non performing Assets

2008 - 2014 காலத்தில் இந்திய வங்கிகளால் கண்டவர்களுக்கு கடன் வழங்கப்பட்டு 18 லட்சம் கோடியாக இருந்த மொத்தக் கடன் தொகை 52 லட்சம் கோடியாக அதிகரித்துவிட்டது. அந்த 52 லட்சத்தில் 5.4 லட்சம் கோடி வாராக்கடனாகவும் மாறியது. அதை எல்லாம் வசூலித்தது பாஜக த்தானாம். அதுவும் ஆர்பிஐ-யை தைரியமாக மிரட்டி வசூலிக்க வைத்தார்களாம்.

இப்படி தன் பேச்சில் காங்கிரஸை துவைத்து தொங்கவிட்டார் பியுஷ் கோயல். ஆனால் இதர்கு பதிலடி தரும் விதத்தில் காங்கிரஸின் சசி தரூர் "பியுஷ் சொல்வது எல்லாம் வெத்து எண்கள்" என அசால்டாக டீல் செய்து கடக்கிறார். ஆனால் ஒரு விஷயம் நிச்சயம். இது போன்ற பொருளாதார கணக்கீடுகளை சாமானியர்கள் புரிந்து கொள்வது அத்தனை எளிதல்ல. எனவே சொல்வதை கேட்க முடியுமோ ஒழிய அதை சரி பார்க்க முடியாது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

piyush goyals speech is continuously blaming congress

today piyush goyal's budget speech is continuously blaming congress to make them shine
Story first published: Friday, February 1, 2019, 17:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X