பட்ஜெட் 2019: பட்ஜெட்டின் பாசிட்டிவ், நெகட்டிவ் இதுதாங்க!
டெல்லி: மத்திய அமைச்சர், பியூஷ் கோயல் இன்று தாக்கல் செய்த மத்திய இடைக்கால பட்ஜெட், முழு பட்ஜெட் போல விரிவாக இருந்தது. புதிய அறிவிப்புகளுடனும் இருந்தது.
விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர் நலனுக்காக சலுகைகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்மைகள்:
- 2 ஹெக்டேர் நிலத்திற்கு குறைவாக கொண்டுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 12 கோடி பேர் பலனடைவார்கள்.
- அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மெகா பென்ஷன் திட்டத்தால் அவர்களுக்கு 60 வயதான பிறகு மாதம் ரூ.3000 பென்ஷன் கிடைக்கும்.
- தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் என்பதிலிருந்து இரட்டிப்பாக உயர்த்தப்பட்டு ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 3 கோடி பேர் பலனடைவார்கள். இவையெல்லாம் நன்மைகள்.
எதிர்மறைகள்:
- விவசாயிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் மற்றும், பென்ஷன் திட்டத்திற்கான, நிதி ஆதாரத்தை அரசு எப்படி திரட்டப்போகிறது?
- வருமான வரி விலக்கு உயர்த்தப்பட்டிருந்தாலும், அதனால் அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாய் கணிசமாக குறைந்துவிடும் என்பது நிதியியல் நிபுணர்கள் பார்வை
- மேற்குறிப்பிட்ட சலுகைகளால் நாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
நிதிப்பற்றாக்குறை என்பது 6 சதவீதமாக இருந்து 3 சதவீதமாக குறைக்கப்பட்டதாக பியூஷ் கோயல் அறிவித்தார். ஆனால், புதிய கவர்ச்சி அறிவிப்புகளால் மீண்டும் நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது தெரிந்தும் பியூஷ் கோயல் இந்த அறிவிப்புகளை வெளியிட்டது தேர்தலுக்குத்தானே என்ற கேள்வி எழுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications