டெல்லி: மத்திய அமைச்சர், பியூஷ் கோயல் இன்று தாக்கல் செய்த மத்திய இடைக்கால பட்ஜெட்டில் ரயில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
பொதுபட்ஜெட்டுடன் சேர்த்தே ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறையை 2017ம் ஆண்டு, மோடி அரசு கொண்டு வந்தது. இவ்வருடமும் அதே நடைமுறை தொடர்ந்தது.

பியூஷ் கோயல் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு, ரூ.1.6 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தொகை இதுவாகும்.
ஆளில்லாத ரயில்வே கிராசிங் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய ரயில்வே வரலாற்றிலேயே கடந்த ஆண்டுதான் விபத்துகள் குறைவாக நடந்த ஆண்டு என்றும், பியூஷ் கோயல் தெரிவித்தார்.
ரயில்வே மூலதன ஆதரவு நிதியாக ரூ.64,587 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் திட்டத்தால், வேலை வாய்ப்பு அதிகரிக்கும். முழுக்க இந்திய ரயில் நெட்வொர்க் மூலமாகவே, இந்த ரயில் திட்டம் அமல்படுத்தப்படும்.
இவ்வாறு பியூஷ் கோயல் அறிவித்தார். புதிய ரயில்கள் குறித்தோ, கட்டண உயர்வு குறித்தோ அவர் தெரிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications