டெல்லி:திரைப்பட படப்பிடிப்புகள் சிக்கலின்றி இனி நடைபெற இந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஒற்றை சாளர அனுமதி வழங்கப்படுவதாக அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பை அவர் இடைக்கால பட்ஜெட்டில் வெளியிட்டு உள்ளார். அவர் மேலும் கூறியதாவது: திரைப்படத்துறையானது மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உள்ளடக்கிய ஒரு துறை. அந்த பொழுது போக்கு துறையை ஊக்கமளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் சுலபமாக நடைபெற இணையதள வழி ஒற்றைச் சாளரமுறை அனுமதி அளிக்கப்படும்.கடந்த காலங்களில் இதுபோன்ற வசதிகள் வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே கிடைத்தது.
இச்சட்டத்தின்படி, தற்போது இந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் கிடைக்கும். புதிய பட்ஜெட்டில், திரைப்படத்துறையில் மலிந்து வரும் வீடியோ பைரசியை தடுக்க ஒளிப்பதிவு சட்டத்தின்படி இயற்றப்படும் சட்டவிரோத திரைப்பட திருட்டு கட்டுப்பாட்டு சட்ட விதிகளும் அடங்கும்.
அதற்கேற்ப, திருட்டு விசிடியைத் தடுக்கவும் சட்டவிதிகள் இயற்றப்படும். படபிடிப்புக்கான பல்வேறு அரசு அனுமதிகளை ஒற்றை சாரள முறையில் எளிமையாக பெற முடியும். இதன்மூலம் நேரடியாக எந்த இடங்களுக்கும் சென்று அனுமதி தருமாறு காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை என்று அவர் கூறினார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications