Tamil Nadu Budget 2019: தமிழக பட்ஜெட் 2019... வருகிற 8-ம் தேதி தாக்கல் செய்கிறார் ஓ.பன்னீர்செல்வம்
tamil nadu budget on february 8th, o. panneerselvam to be filed a budget, தமிழக பட்ஜெட் பிப்ரவரி 8 ம் தேதி தாக்கல், ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்
சென்னை: 2019 - 20 ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் வருகிற 8-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.
சட்டசபையில் காலை 10 மணிக்கு நிதித்துறையை கவனிக்கும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை
தாக்கல் செய்கிறார்.

தமிழக சட்டசபை கடந்த 2-ந் தேதி கூடியது. இந்தாண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தினார். அதன் பின்பு 8-ந் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.
இந்தநிலையில், இன்று மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பல்வேறு அதிரடி அறிவிப்புகளை நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ள பியூஷ் கோயல் வெளியிட்டார்.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர இருப்பதால், பட்ஜெட்டில் பல முக்கிய திட்டங்கள், வரிச்சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications