சாமானியருக்கான பட்ஜெட்... இடைக்கால பட்ஜெட் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் கருத்து
சென்னை: இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட் சாமானியருக்கான பட்ஜெட் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளர்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீத ஜிடிபி உள்ளிட்ட அனைத்திலும் ஏறுமுகமாக பாஜக அரசு செய்துள்ளது.

எங்கள் கோரிக்கையையும், தமிழக அரசின் கோரிக்கையையும் ஏற்று மீனவர்களுக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருமானம் வரி செலுத்துபவர்கள் அதிமாக இருப்பதால் இந்த பட்ஜெட், மக்களுக்கான தேவையை பூர்த்தி செய்துள்ளது.
ஜிஎஸ்டி- க்கு முன்பு வரை வரி ஏய்ப்பு செய்தவர்கள் அதிமாக இருந்தனர். இப்பொழுது வரி செலுத்துபவர்கள் அதிகமாக உள்ளனர். கம்யூனிஸ்ட்டு மற்றும் பல கட்சிகள் எங்கு குறையிருக்கிறது என தேடி பார்க்கிறார்கள். இது குறை சொல்ல முடியாத பட்ஜெட் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications