வீட்டு வாடகைக்கான வரி விலக்கு வரம்பு ரூ. 1.80 லட்சம் முதல் ரூ 2.40 லட்சமாக உயர்வு
டெல்லி: வீட்டு வாடகைக்கான வரி விலக்கு வரம்பு ரூ. 1.80 லட்சத்திலிருந்து ரூ. 2.40 லட்சத்துக்கு மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் எனப்படும் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் (பொறுப்பு) பியூஷ் கோயல் இன்று தாக்கல் செய்தார்.

அப்போது கோயல் கூறுகையில் வீட்டு வாடகைக்கான வரி விலக்கு வரம்பு ரூ. 1.80 லட்சத்திலிருந்து ரூ. 2.40 லட்சமாக உயர்த்தப்படுகிறது. அதன்படி
ஒட்டுமொத்த வருமான வரி சலுகை மூலம் ரூ 6.50 லட்சம் வரை வருமானம் பெருவோர் வரி செலுத்த தேவையில்லை என்றார்.


Click it and Unblock the Notifications