“என்னோட கம்பெனி திவால் ஆயிருச்சுங்க, கடங்காரங்களுக்கு கொடுக்க காசு இல்ல” கதறும் அம்பானி..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அண்ணனோடு சண்டை போட்டு சொத்துக்களைப் பிரித்துக் கொண்டு போயும் தம்பி அனில் அம்பானியால் அண்ணனுக்கு இணையாக பிசினஸில் வெற்றி பெற முடியவில்லை. சரி விஷயத்துக்கு வருவோம்.

 

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு 46,000 கோடி ரூபாய் கடன் இருக்கிறது. இந்தக் கடன்களை திருப்பிச் செலுத்த கடந்த 12 மாதங்களில் 45 கூட்டங்களுக்கு மேல் பேசி எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை. இப்போது தன் நிறுவனம் திவால் ஆகிவிட்டது என தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் (NCLAT - National Company Law Appellate Tribunal) விண்ணப்பித்திருக்கிறார்.

கடனுக்காக இந்த முடிவு

கடனுக்காக இந்த முடிவு

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கும், அதன் பங்குதாரர்களுக்கும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் முக்கியஸ்தர்களின் நலனுக்காகவும் தான் தங்கள் நிறுவனத்தை விற்றும் வரும் தொகையில் கடனை திருப்பிச் செலுத்த இருக்கிறார்களாம். இன்னும் 270 தினங்களில் (9 மாதங்களில்) ஆர்காம் நிறுவன சொத்துக்கள் விற்கப்பட்டு வரும் தொகையை அப்படியே கடன் காரர்களுக்கு கொடுத்து செட்டில் செய்ய ஆர்காம் இயக்குநர் குழு ஒப்புக் கொண்டதாம்.

இதுவரை ஒரு ரூபாய் இல்லை

இதுவரை ஒரு ரூபாய் இல்லை

இதுவரை 46000 கோடி ரூபாயை கடனாகக் கொடுத்த 40 பேருக்கு (வங்கி மற்றும் நிறுவனங்கள் உட்பட) கடன் கொடுத்தவர்களுக்கு ஒரு ரூபாய் கூட சொத்துக்களை விற்று கொடுக்கவில்லையாம்.

ஜியோ வந்தும் வேலைகு ஆக வில்லை
 

ஜியோ வந்தும் வேலைகு ஆக வில்லை

தம்பி அனில் அம்பானியின் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை வாங்கி ஜியோவுக்கு பயன்படுத்தலாம் என்கிற திட்டத்துடன் இர்நுதார் முகேஷ் அம்பானி. ஆனால் அதற்கு இந்திய டெலிகாம் துறை ஒப்பு கொள்ளவில்லை. ஆர்காம் நிறுவனத்தின் முழு கடன்கள் திர்த்த பின் அலைக்கற்றைகளை வாங்கிக் கொள்ளுங்கள் இல்லை என்றால் ஆர்காம் நிறுவனத்தை மொத்தமாக வாங்கிக் கொள்ளுங்கள். ஆர்காம் நிறுவனத்தை ஜியோ வாங்கினால் ஆர்காம் நிறுவனத்தின் முழு கடன்களுக்கும் ஜியோ தான் பொறுப்பு என்று கறார் காட்டியது. முகேஷ் அம்பானி மறுத்துவிட்டார்.

காசு கொடு இல்ல கைதாகிப் போ

காசு கொடு இல்ல கைதாகிப் போ

ஆர்காம் நிறுவனம் சுவிர்சர்லாந்தின் எரிக்ஸன் நிறுவனத்துடன் ஒரு ஒப்ப்ந்தத்தில் கையெழுத்து போட்டது. அதன் படி 2014 முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஆர்காம் நிறுவனத்தை நிர்வகித்து தொலைத் தொடர்புச் சேவையை வழங்க வேண்டும். இதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்குவதாக ஒப்புக் கொண்டது ஆர்காம். எரிக்ஸனுக்கு வழங்க வேண்டிய தொகையில் 1600 கோடி நிலுவைத் தொகையை வழங்கவில்லை ஆர்காம்.

ஒப்புக் கொண்ட ஆர்காம்

ஒப்புக் கொண்ட ஆர்காம்

எரிக்ஸன் நிறுவனம் கேட்டுப் பார்த்து சலித்த உடன் நேரடியாக (NCLAT - National Company Law Appellate Tribunal அமைப்பிடம் ஆர்காம் காசைக் கொடுக்க மறுப்பதாக புகார் எழுப்ப, ஆர்காம் தன்னால் முழு தொகையைத் தர முடியாது எனவே 550 கோடி ரூபாயை தந்துவிடுவதாக ஒப்புக் கொண்டது. இப்படி ஒப்புக் கொண்ட பிறகு ஆர்காம் இந்திய உச்ச நீதிமன்றத்தை அனுகி, தன் சொத்துக்களை தானே விற்று 550 கோடி ரூபாயை அடைக்கிறேன் என வாதிட்டது. அதற்கு உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 30, 2018 வரை காலக் கெடு கொடுத்தது.

சட்டப் பிரச்னைகள்

சட்டப் பிரச்னைகள்

ஆனால் ஆர்காமால் தன் சொத்துக்களை விற்று 550 கோடி ரூபாயை திரட்ட முடியவில்லை. அலைக்கற்றைகளை விற்கச் சென்றால் ஏகப்பட்ட நடைமுறை மற்றும் சட்ட சிக்கல்கள் இருந்தன. அவைகளை முறையாக தீர்த்து விற்க முடியவில்லை. எரிக்ஸன் நிறுவனம், இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஆர்காம் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்து அனில் அம்பானியை கைது செய்ய வேண்டும் என வாதிட்டது. பிரச்னைகளைச் சொல்லி மீண்டும் ஒரு 60 நாள் காலக் கெடுவை அதிகரிக்குமாறு வாதிட்டது ஆர்காம் நிறுவனம்.

வித்துட்டோம்

வித்துட்டோம்

இன்னும் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறதாம். எப்படியும் இந்த வழக்கில் அனில் அம்பானிக்கு எதிராகவே தீர்ப்பு வர வாய்ப்பிருப்பதால், நிறுவனத்தை (NCLAT - National Company Law Appellate Tribunal) அமைப்பு மூலமே விற்ரு வரும் பணத்தை வைத்து அந்த அமைப்பே கடன்களை அடைக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் அனில் அம்பானி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

anil ambani file insolvency in national company law appellate tribunal for reliance communications

anil ambani file insolvency in national company law appellate tribunal for reliance communications
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X