2018 - 19 நிதியாண்டின் நிதிப் பற்றாக்குறை 3.3 சதவிகிதத்துக்குள் கட்டுப்படுத்த வாய்ப்பிருப்பதாக பேட்டி கொடுத்திருக்கிறார் சுபாஷ் சந்திர கார்க். இவர் தான் பொருளாதா விவகாரத் துறையின் செயலராக பணியாற்றி வருகிறார். இடைக்கால பட்ஜெட்டில் பெரும்பாலானவைகளுக்கு வழி வகுத்துக் கொடுத்தது இவர் தான்.

மத்திய பொருளாதார விவகாரத் துறை செயலரின் கருத்துக்கு எதிர் கருத்தை நேற்று ()பிப்ரவரி 01, 2019) பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போதே விரிவாகச் சொல்லி விட்டார் நிதி அமைச்சர் பியுஷ் கோயல். இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை அனேகமாக 3.4 சதவிகிதத்துக்குள் இருக்கும் என்றார்.
இப்போது தான் விவசாயிகளுக்கு Pradhan Mantri Kisan Samman Nidhi - PMKSN திட்டத்தின் கீழ் கொடுக்க வேண்டிய தொகயை கொடுக்க மத்திய அரசு மாநில அரசாங்கங்களிடம் பட்டியல் கேட்டிருக்கிறது. இந்த திட்டத்துக்கான ஒரு தவனையை கொடுக்க மட்டுமே சுமார் 25,000 கோடி ரூபாய் செலவாகும் என்று இதே நிதி அமைச்சகம் தான் கணக்கிட்டுச் சொன்னது.
இப்படி ஒரு பக்கம் எந்த பணத்தை செலவு செய்து கொண்டிருக்கும் போது இந்திய அரசின் நிதிப் பற்றாக்குறயை எப்படி கட்டுப்படுத்த முடியும் எனவும் கேள்வி எழுப்புகிறார்கள்.
2018 - 19-ம் ஆண்டை 3.3 சதவிகித நிதிப் பற்றாக்குறைக்குள் அடக்க வேண்டியது மட்டும் இல்லாமல் 2020 - 21 நிதி ஆண்டில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறையை 3 சதவிகிதத்துக்குள் மட்டுமே வைத்திருக்கவும் திட்டமிட்டு வருகிறதாம். 2020 - 21-ல் இந்தியாவின் வரி வருவாய் இந்தியாவின் மொத்த ஜிடிபிய்ல் 12.21% ஆக உயரும். இப்போது 12.1 சதவிகிதமாகத் தான் இருக்கிறது என கணக்கு சொல்கிறார்கள்.


Click it and Unblock the Notifications