பாத்தியா... பியுஷ் கோயல வெச்சி பேர் சம்பாதிச்சுட்டேன்..? மோடி பெருமிதம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பியுஷ் கோயல் என்ற உடன் நமக்கு எல்லாம் என்ன நினைவுக்கு வரும்...? இப்போதைய நிதி அமைச்சர், ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமான வரி கட்ட வேண்டாம், நிலையான கழிப்புகளாக 50,000 வரை கட்ட வேண்டாம் எனச் சொன்ன மகராசன். இவ்வளவு தானே நினைவுக்கு வரும். ஆனால் மோடி பியுஷ் கோயலை வேறு மாதிரி எடை போட்டு தான் அவரை நிதி அமைச்சராக ஆக்கினாராம்.

படிப்பாளி

படிப்பாளி

இவர் ஒரு பட்டையக் கணக்காளர் (Chartered Accountant - CA). அகில இந்திய அளவில் சிஏ இறுதித் தேர்வில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றவர். அப்படியே மும்பை பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பிலும் வெள்ளிப் பதக்கம் வென்றவர். ஆக கணக்கு வழக்குகள், சட்டம், பொருளாதாரம், பிசினஸ் என ஒரு பறந்து பட்ட அறிவு கொண்டவர்.

எல்லாம் பெரிய நிறுவனங்கள் டூ கட்சி

எல்லாம் பெரிய நிறுவனங்கள் டூ கட்சி

இன்வெஸ்ட்மெண்ட் பேங்கராக தன் வாழ்கையைத் தொடங்கிய இவருக்கு அபார நியாக சக்தி உண்டு. இந்தியாவின் பல்வேறு பொதுத் துறை வங்கிகளின் இயக்குநர் குழுவில் திறமையினால் பதவி வகித்து வங்கிகளை வழி நடத்தியவர். ஒரு கால கட்டத்தில் அப்பாவின் அடித்தளம் பற்றி அப்படியே அரசியலுக்குள் பாஜக மூலம் வந்தவர். படிப்படியாக வளர்ந்து பாஜக கட்சியின் பொருளாலராக பதவி வகித்தார்.

இருவருமே பாஜக அரசியல் வாதிகள் தான்

இருவருமே பாஜக அரசியல் வாதிகள் தான்

அப்பா வேத் பிரகாஷ் கோயல் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் காலத்தில் கப்பல் துறை அமைச்சராக இருந்தவர். அம்மா சந்திரகாந்தா கோயல் மகாராஷ்டிரத்தின் சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை தேர்தலில் நின்று வென்றிருக்கிறாராம். அப்படிப்பட்ட அரசியல் முன் புலம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்.

வேண்டாமுங்க அது கொஞ்சம் அலர்ஜி

வேண்டாமுங்க அது கொஞ்சம் அலர்ஜி

இத்தனை அறிவும் திறமையும் இருந்து மனிதருக்கு பெரும் தலைவர்களை போல பேச்சாற்றல் கிடையாது. மக்களோடு மக்களாகப் பேசத் தெரியாது. அதனாலேயே இவருக்கு மக்களவைத் தேர்தலில் நிற்க சீட்டு கொடுக்கவில்லை. ஆனால் 2014 மக்களவைத் தேர்தல் வேலைகளில் தகவல் தொலைத் தொடர்புத் துறைத் தலைவர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. சிறப்பாக செய்து மேலிடத்தில் நல்ல பெயர் வாங்கினார். மகாராஷ்டிரத்தில் இருந்து ராஜ்ய சபா எம்பியாக பாராளுமன்றத்துக்குள் நுழைந்தார்.

கேபினெட் அமைச்சர்

கேபினெட் அமைச்சர்

16-வது மக்களவைக்கு அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்ட போது இவருக்குக்கட்டாயம் அமைச்சரவையில் இடம் வேண்டும் என வலியுறுத்தியது மேலிடம். முன்பே இவர் திறமையைக் கண்டிருந்த மோடி இவருக்கு மின்சாரத் துறை, நிலக்கரித் துறை, புதிய புதுப்பிக்கத்தக்க எனர்ஜித் துறை என மூன்று அமைச்சகத்துக்கு அமைச்சராக நியமித்தார். அதன் பின் சுரங்கத் துறை அமைச்சராக கொஞ்ச நாள் இருந்தார். இப்போது இந்தியப் புகழ் பெற்ற ரயில்வே துறை, நிலக்கரித் துறை, நிதி & கார்ப்பரேட் விவகாரத் துறை என மூன்று பெரும் துறைகளை கையில் வைத்திருக்கிறார். இப்போது ஒரு பட்ஜெட்டும் தாக்கல் செய்துவிட்டார்.

வளர்ந்த கோயல்

வளர்ந்த கோயல்

வேலை பார்ப்பதற்கு என்றே பிறந்தவர் போல வேலைகளை இழுத்து போட்டுப் பார்ப்பாராம். ஏதோ 30,000 - 40,000 ரூபாய் சம்பளத்துக்கு ராப் பகலாக டார்கெட்டுகளை அடைய வேலை பார்ப்பது போல வேலை செய்வாராம். அதனாலேயே கட்சியில் எந்த புதிய வேலை உடனடியாக முடித்து நல்ல பெயர் வாங்க வேண்டிய வேலைகளை எல்லாம் பியுஷைக் கூப்பிடு என மேலிடம் உரிமையாகக் கூப்பிட்டுக் கொடுக்குமாம்.

செய்து முடித்த காரியங்கள்

செய்து முடித்த காரியங்கள்

24 மனிநேரமும் மின்சாரம் வழங்கும் திட்டம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் டிட்டங்கள், உஜ்வல் திட்டம் மூலம் கடனாளிகலாக இருந்த மின்சார நிறுவனங்களை மீண்டும் செயல்பட்டுக்குக் கொண்டு வந்தது. காங்கிரஸ் ஆட்சி நிலக்கரி ஊழல் கறையோடு நடந்த ஒதுக்கீடுகளுக்குப் பின் இழுத்துப் பிடித்து சுத்தமாக நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை செய்த பெருமையும் இவருக்கு உண்டு.

அமெரிக்கா பாராட்டு

அமெரிக்கா பாராட்டு

Carnot prize என்கிற பரிசை சில வாரங்களுக்க்கு முன் தான் அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் பியுஷ் கோயலுக்கு வழங்கியது. காரனம் அவரின் எல்.இ.டி பல்புகளை இந்தியாவில் பெரிய அளவில் விலை குறைவாக கிடைக்கச் செய்ததற்காக இந்த விருது கொடுக்கப்பட்டதாம்.

நம்ம பேர காப்பாத்திருவான்

நம்ம பேர காப்பாத்திருவான்

அருண் ஜெட்லி பதவியில் இருந்த போது தான் நாட்டுக்கு பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, உர்ஜித் படேல் ராஜினாமா போன்ற எல்லா நல்ல காரியங்களும் நடந்தது. மீண்டும் அருண் ஜெட்லியே இந்த பட்ஜெட்டையும் வாசிப்பதை விட ஒரு நல்ல பையன் வாசித்தால் நன்றாக இருக்கும் என யோசித்த கொண்டிருந்தார் மோடி. அப்போது முகத்தில் கத்தி படாமல் நகு நகுவென சவரம் செய்த முகத்துடன் வந்த பியுஷ் கோயல் தேர்வானார். ஐந்து லட்சம் தள்ளுபடி, விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் பணம் போன்ற திட்டங்களால் சொன்னது போலவே ஓரளவுக்கு நல்ல பெயரும் எடுத்துக் கொடுத்துவிட்டார்.

அதனால் தான் "என்ன கண்ணுங்களா பாத்தீங்களா, பியுஷ் கோயல வெச்சி பாஜகவுகும் எனக்கும் பேர் சம்பாதிச்சுக்குட்டேன்" என மோடி சொல்கிறார். அதனாலத்தான் ஜி நீங்க அரசியல் வாதியா இருக்கீங்க.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

modis master plan behing piyush goyals appointment as finance minister

modis master plan behing piyush goyals appointment as finance minister
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X