அமெரிக்க சீன வர்த்தகப் போர். கடந்த சில மாதங்களாக செய்தித் தாள்களில் அதிகம் அடிபடும் வார்த்தை. முதலில் சீன பொருட்களுக்கு அமெரிக்க திடீரென கூடுதல் வரி விதித்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது புதிதாக கூடுதல் வரி விதித்தது. இன்று வரை பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. வர்த்தகப் போர் ஒரு முடிவுக்கு வர மார்ச் 1, 2019 ஒரு கெடுவாக நிர்ணயித்திருக்கிறது அமெரிக்கா.
ஷி ஜின்பிங்
"அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான உறவுகள் தற்போது மிகவும் ஆபத்தான மற்றும் முக்கியமான நிலையில் இருக்கிறது. நம் இரு நாடும் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்து நல்ல பிசினஸ்களில் ஈடுபடுவோம்" என கடிதம் எழுதி இருக்கிறார் சீன அதிபர் ஷி ஜின்பிங்.
அமெரிக்க அதிபர் பதில்
சீனா மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான வர்த்தகப் போர் குறித்த பேச்சு வார்த்தை, சுமூகமாகவும், விரைவாகவும் நடந்து வருகிறது என ஒரு இடத்தில் பேசுகிறார் ட்ரம்ப். மற்றொரு இடத்தில் சீனா protectionism and systematic intellectual property theft போன்ற வணிக விதிமீறல்களில் ஈடுபடக் கூடாது என்று பேசுகிறார். மற்றொரு மேடையில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் போது "நா சீனா உடன் ஒரு உண்மையான டீலைச் செய்து முடிக்க விரும்புகிறேன். அமெரிக்க சந்தைகள் சீனாவுக்கு திறந்து இருப்பது போல சீன சந்தைகளுக்கு அமெரிக்காவுக்கு திறக்கப்பட வேண்டும்" என குட்டையைக் குழப்புகிறார். இதை எல்லாம் விட மொத்த சமாதான படலத்தை உடைக்கும் விதத்தில் "சீனா உடன் ஒரு டீலும் நடக்கவில்லை என்றால் கூட சீன பொருட்கள் மீது விதித்திருக்கும் 10% வரி 25 %-ஆக உயர்த்தப்படும் எனவும் பேசி இருக்கிறார் அதிபுத்திசாலி டிரம்பு.
அமெரிக்க வர்த்தக் குழு
அமெரிக்கா சார்பாக சீன அரசுடன் சமரசம் பேசி தங்களுக்கு சாதகமாக சில வர்த்தக மாற்றங்களைக் கொண்டு வர ஒரு குழுவை அமெரிக்க வெள்ளை மாளிகையில் இருந்து அனுப்புகிறார் டிரம்ப். இந்த குழு பிப்ரவரி மாதத்தின் முதல் வார இறுதிக்குள் சீனா செல்ல இருக்கிறது. அமெரிக்க தரப்பில் இருந்து ராபர் லைட்சர் (Robert Lighthizer) "இரு நாட்டுக்குள் நல்ல தீரு எட்ட நிறைய உழைக்க வேண்டி இருக்கிறது. ஆனால் இந்த வர்த்தக ஒப்பந்தங்கள் அமெரிக்காவுக்கு வெற்றியைத் தருவது நடக்காத காரியம். ஆனால் அமெரிக்கா எதிர்பார்க்கும் வெற்ரி கிடைக்கும்" என பட்டும் படாமல் சொல்லிவிட்டார்.
சீன சமரச பேச்சுக்கான அதிகாரிகள்
சீனா தரப்பில் இருந்து துனை பிரீம்யர் லியூ ஹி (Liu He) வர்த்தகப் போருக்கான சமாதானப் பேச்சுக்காக வாசிங்டன் வந்திருந்தார். எது என்னா முடிவானால் சீனாவின் அதிபரும் அமெரிக்க அதிபரும் சந்தித்து விஷயங்களைப் பேசும் போது தான் ஒரு முட்வுக்கே வர முடியும். அந்த முடிவு சாதகமாகவும் இருக்கலாம், பாதகமாகவும் இருக்கலாம் என சீன தரப்பு தன் கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.
பதறும் உலக வர்த்தக அமைப்புகள்
ஏற்கனவே அமெரிக்கா தன் வல்லரசு பதவியில் இருந்து தன் பிடியை கொஞ்சம் கொஞ்சமாக நழுவ விட்டுக் கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் சீனாவும் தன் 20 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு பொருளாதார மந்தநிலையில் இருக்கிறது. இந்த தருணத்தில் உலகின் இரு பெரும் பொருளாதாரங்கள் இப்படி தங்களுக்குள் அடித்துக் கொள்வது இரண்டு நாட்டுப் பொருளாதாரத்தையும் முழுவதுமாக பாதிக்கும் என உலக வர்த்தக அமைப்புகள் தங்கள் பயத்தை வெளிப்படுத்தி இருக்கின்றன.


Click it and Unblock the Notifications