காந்தி. இந்தியாவின் தேசத் தந்தை. அவரின் 150- ஆண்டு பிறந்த நாள் நினைவாகவும் இந்தியாவில் காதி ஆடைகளை பிரபலப்படுத்தவும் ஒரு ரயிலை இயக்க இருக்கிறார்களாம்.
இந்திய தேசத்தின் தந்தை காந்தியடிகளுக்கு காதி மீது இருந்த காதலை வெளிப்படுத்தும் விதமாக ஒரு ரயிலை இந்தியா முழுமைக்கும் விட இருக்கிறார்களாம். அந்த ரயிலின் பெயர் காதி எக்ஸ்பிரஸ்.
காதி கிராம தொழிற்துறை தலைவர் (Khadi Village Industries Commission) வினய் குமார் சக்ஸேனா இதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இரண்டு மாதங்களில்
இன்னும் இரண்டு மாதங்களில் காதி எக்ஸ்பிரஸ் தன் பயணத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கிறார்களாம். அதற்கான வேலைகளை காதி அமைப்பும், ரயில்வே துறையும் அதிவேகமாக பார்த்து வருகிறதாம்.
khadi express
இந்த ரயிலில் எட்டு பெட்டிகள் இருக்குமாம். அதில் ஒரு பெட்டி காந்தியடிகளின் ஓவியங்கள், புகைப்படங்கள், அவர் வாந்த வாழ்கை முறையைக் காட்டும் விதமாக இருக்குமாம். மற்றொரு பெட்டியில் காதி விற்பனைக்காக ஒதுக்கி இருக்கிறார்களாம்.
ஆம் ரயில் நிலையங்களில் காதி
காதி எக்ஸ்பிரஸ் ரயிலைத் தாண்டி பல்வேறு ரயில் நிலையங்களிலும் காதி வஸ்திரங்களை விற்கவும் ஏற்பாடு செய்து வருகிறார்களாம்.
நிறுத்தங்கள் எங்கே..?
காதி எக்ஸ்பிரஸ் காந்தியடிகள் பயணித்த வழித் தடங்களில் இயக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம். அதோடு காந்தியடிகள் தங்கி இருந்த இடங்களில் (அந்த ஊர் ரயில் நிலையங்களில்) ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு அங்கே நிற்குமாம். பொதுமக்கள் வந்து காதி எக்ஸ்பிரஸை காணத் தான் இந்த கால அவகாசமாம். காதி எக்ஸ்பிரஸ் காந்தி பிறந்த போர்பந்தரில் இருந்து தான் தொடங்குகிறதாம். அங்கிருந்து சபர்மதி, அஹமதாபாத், ராஜ்கோட், மும்பை, வார்தா போன்ற நகரங்களுக்கு பயணிக்க இருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications