இந்தியாவின் டாப் 10 அதிக மதிப்பு கொண்ட பங்குகள் இது தான்... இவர்கள் தான்..!

பங்குச் சந்தை என்ற உடனேயெ புரியாத பல புதிர்களை உள்ளடக்கிய ஒரு இடம் என்பது தான் பலரும் பொதுவாகச் சொல்லும் கருத்து.

ஆனால் அதிலும் சரியாக வியாபாரம் பார்த்து லாபம் பார்த்தவர்களும் உண்டு. அப்படி சந்தையை புரிந்து கொள்ள பயன்படும் முக்கியமான சில விஷயங்களில் சந்தை மதிப்பும் ஒன்று.

ஒரு நிறுவனத்தின் மொத்த பங்குகளின் எண்ணிக்கையை, அப்போதைய பங்கு விலையோடு பெருக்கினால் கிடைப்பது சந்தை மதிப்பு. உதாரணமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் 100 பங்குகள் இருக்கிறது. அதன் இப்போதைய சந்தை விலை 10 ரூபாய் என்றால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 100 * 10 = 10,000 ரூபாய். அப்படி இந்திய பங்குச் சந்தைகளின் டாப் 10 நிறுவனங்களின் சந்தை மதிப்புகளை இங்கே பார்ப்போம்

முதல் இரண்டு இடங்கள்

முதல் இரண்டு இடங்கள்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எனப்படும் முகேஷ் அம்பானியின் நிறுவனம் தான் 7.90 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்புடன் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் கீழ் தான் ரிலையன்ஸின் எண்ணெய் நிறுவனம் தொடங்கி ஜியோ வரை அனைத்தும் நடக்கிறது.

அதனைத் தொடர்ந்து டிசிஎஸ் 7.62 லட்சம் கோடி ரூபாய் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. டாடா குழுமத்தின் லாபகரமான நிறுவனம். இந்த நிறுவனத்தின் கீழ் தான் மொத்த டாடா குழுமத்தின் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த, மென்பொருள் சார்ந்த விஷயங்கள் நடக்கின்றன.

 

அடுத்த இரண்டு இடங்கள்

அடுத்த இரண்டு இடங்கள்


ஹெச்டிஎஃப்சி வங்கி 5.69 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்புடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. இந்த வங்கியப் பற்றி அதிகம் சொல்லத் தேவை இல்லை.
ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் 3.88 லட்சம் கோடி ரூபாய் உடன் நான்காவது இடத்திலும் இருக்கிறது. இது தான் இந்தியாவின் மிகப் பெரிய FMCG - Fast Moving consumer Goods நிறுவனம். இது ஒரு சுவாரஸ்யமான துறை இதில் காலையில் பல்துளக்கும் பேஸ்ட் தொடங்கி இறவு தூங்கும் போது பயன்படுத்தி குசுவத்தி வரை அனைத்தும் இதன் கீழ் அடங்கும்.

ஐந்து & ஆறாம் இடங்கள்

ஐந்து & ஆறாம் இடங்கள்

ஐடிசி 3.43 லட்சம் கோடி ரூபாய் உடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இது மேலே சொன்ன FMCG நிறுவனங்களுள் ஒன்று. இந்தியாவின் ஹிந்துஸ்தான் யுனிலிவருக்கு போட்டி போட்டு சந்தையை பிடிப்பதில் ஐடிசிக்கு எப்போதும் தனி இடம் உண்டு.
ஹெச்டிஎஃப்சி 3.37 லட்சம் கோடி ரூபாயுடன் 6-வது இடத்தில் இருக்கிறது. இது வீட்டுக் கடன் கொடுக்கும் நிறுவனம். இந்தியாவின் மிகப் பெஇர்ய வீட்டுக்கடன் நிறுவனத்தில் இதற்குத் தான் நம்பர் 1.

ஏழாவது மற்றும் எட்டாவது இடங்கள்

ஏழாவது மற்றும் எட்டாவது இடங்கள்

இன்ஃபோசிஸ் 3.30லட்சம் கோடி ரூபாயுடன் ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவின் ஐடி நிறுவனங்களில் நம்பர் 2. நபர் 1 டிசிஎஸ். இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி என்றால் தெரியாத நபர் உண்டா..?

ஸ்ஏட் பேங்க் ஆஃப் இந்தியா 2.53 லட்சம் கோடி ரூபாயுடன் எட்டாவது இடத்தில் இருக்கிறது. ஆம் ஒரு அரசுத் துறை நிறுவனம். மொத்த டாப் 10 பட்டியலில் ஒரே ஒரு அரசுத் துறை நிறுவனம் என்றால் அது எஸ்பிஐ தான். இதைப் பற்றியும் அதிகம் பேசத் தேவை இல்லை.

 

ஒன்பது மற்றும் பத்தாவது இடம்

ஒன்பது மற்றும் பத்தாவது இடம்

கோட்டக் மஹிந்திரா 2.40 லட்சம் கோடி ரூபாய் உடன் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. மஹிந்திரா நிறுவனத்தின் வங்கி சமீபத்தில் ரன்வீர் சிங்கை வைத்து எடுத்த விளம்பரங்கள் எல்லாம் வேற ரகம்.

ஐசிஐசிஐ வங்கி 2.28 லட்சம் கோடி ரூபாய் உடன் பத்தாவது இடத்தில் இருக்கிறது. கடனைத் திருப்பித் தரவில்லை என்றால் காலி என்கிற ரீதியில் வசூல் செய்த நிறுவனம். சமீபகாலமாக இந்த வங்கிக்கு நேரம் சரியில்லை. இதன் முன்னாள் தலைவர் சந்தா கோச்சர் மீது தொடர்ந்து நடக்கும் வழக்குகளால் செய்திகள் அடிபட்டுக் கொண்டே இருக்கிறது ஐசிஐசிஐ.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+