இந்திய நாட்டில் வெளிநாடுகளில் இருந்து வந்து முதலீடு செய்பவர்களை வெளிநாட்டு முதலீட்டாலர்கள் என சாதாரணமாகச் சொல்வோம். ஆனால் பொருளாதார துறைகளில் இதை Foreign Portfolio Investors (FPIs) எனச் சொல்வார்கள்.
இவர்கள் கொண்டு வரும் முதலீட்டைத் தான் நாம் அந்நிய நேரடி முதலீடு எனச் சொல்கிறோம். அப்படிப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் ஜனவரி 2019-ல் இருந்து அதிகம் வெளியேறத் தொடங்கி இருக்கிறதாம்.
இங்க வாங்க எங்க போரீங்க என நாடு நாடாக சுற்றித் திரிந்த பிரதமருக்கு என்னவோ 2018 முழு ஆண்டில் 80,919 கோடி ரூபாயை இந்தியாவில் இருந்து வெளியே எடுத்திருக்கிறார்கள். அதே போல் ஜனவரி 2019 ஒரு மாதத்தில் மட்டும் 5,500 கோடி ரூபாயை வெளியே எடுத்திருக்கிறார்கள்.
ட்விஸ்ட்
இதில் ஒரு சிரிய ட்விஸ்ட் போல மோடி தன் பட்ஜெட்டை தாக்கல் செய்த பின் அடுத்த இரண்டே நாட்களில் 2,659 கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்திருக்கிறார்கள் வெளி நாட்டு முதலீட்டாளர்கள்.
காத்திருப்பார்கள்
இனியும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மேற்கொண்டு இந்தியாவில் முதலீடு செய்ய மாட்டார்கள் என பங்குச் சந்தை வல்லுநர்கள் கூறுகிறார்கள். மோடியின் அதிரடித் திட்டங்களால் இந்தியாவின் ஒரு சாராருக்கு நன்மை விளைந்திருந்தாலும், மற்ற சாரார்களுக்கு அத்தனை இன்பமாக விஷயங்களைச் செய்யவில்லை என்பதை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கவனித்து வருகிறார்கள். எனவெ ஒரு வேளை வரும் மக்களவைத் தேர்தலில் தோற்றுவிட்டால் முதலீடு செய்த காசு நஷ்ட மடையக் கூட வாய்ப்பிருபப்தாகச் சொல்கிறார்களாம்.
பொருளாதாரம் சரியில்லை
இதை எல்லாம் விட இந்தியாவின் மேக்ரோ பொருளாதார காரணிகள் தொடர்ந்து அச்சுறுத்தலாகவே இருக்கிறதாம். அமெரிக்க டாலருக்கு நிகரானை இந்திய ரூபாய் மதிப்பு நிலையாக குறைந்து வருவது, கச்சா எண்ணெய் விலை நிலை இல்லாமல் மாற்றமடைந்து வருவது, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை போன்ற பிரச்னைகளும் வெளிநாட்டு முதலீட்டாலர்களை பயமுறுத்தி வருகிறதாம்.
2018-ல் வெளி நாட்டு முதலீட்டு விவரங்கள்
ஜனவரி 2018 முதல் மார்ச் 2018 வரையான காலங்களில் 13,260 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறார்கள். ஏப்ரல் 2018 முதல் ஜூன் 2018 வரையான காலங்களில் 61,132 கோடி மதிப்பிலான முதலீடுகளை விற்று விட்டார்கள். ஜூலை முதல் செப்டம்பர் 2018 வரையான காலங்களில் 13,625 கோடி ரூபாயை விற்று வெளியேறி இருக்கிறார்கள். அக்டோபர் முதல் டிசம்பர் 2018 வரையான காலங்களில் 19,422 கோடி ரூபாயை விற்ரு வெளியேறி இருக்கிறார்கள்.
எனவே ஒட்டு மொத்தமாக மோடி அரசின் மீது வெளிநாட்டு முதலீட்டாலர்களுக்கு ஒரு நம்பிக்கை இன்மையும், பய உணர்வும் அதிகமாகி இருக்கிறது. மேலே சொன்ன விவரங்கள் செபி அமைப்பினால் வெளியிடப்பட்டவைகள்.
More From GoodReturns

ஸ்டாலின் Vs ஈபிஎஸ் Vs விஜய் Vs சீமான்: பெண்களுக்காக இவர்கள் முன் வைக்கும் வாக்குறுதிகள் என்னென்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

அமெரிக்க தலைநகரை ஆளப்போகும் தமிழ் பெண்..!! தேனி டூ வாஷிங்டன்..!! யார் இந்த ரினி சம்பத்?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

குஜராத்-க்கு அடித்தது யோகம்.. செமிகண்டக்டர் சிற் உற்பத்தியில் அடியெடுத்து வைக்கும் கேன்ஸ் டெக்னாலஜி..!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?



Click it and Unblock the Notifications