பிப்ரவரி 01, 2019 அன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் ஆதார் நிறுவனத்துக்கு Unique Identification Authority of India (UIDAI) 2019 - 20 நிதி ஆண்டுக்கு 1,227 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கி இருக்கிறது.
இதற்கு முந்தைய ஆண்டு அதாவது நடப்பு நிதி ஆண்டுக்கு (2018 - 19) ஆதார் அமைப்புக்கு 1,345 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருந்தது. இதைக் குறித்து Unique Identification Authority of India (UIDAI) அமைப்பின் முதன்மைச் செயல் அதிகாரி மற்றும் வருவாய்த் துறை செயலர் அஜன் பூஷன் பாண்டேவைக் கேட்ட போது பட்டும் படாமல் பேசுகிறார்.

"நாங்கள் கேட்டிருக்கு நிதியைத் தான் கொடுத்திருக்கிறார்கள். எங்களுக்கு பழைய கணிணிகள் போன்ற ஹார்ட்வேர்களை மாற்றி விட்டு புதிய ஹார்டுவேர்களை வாங்குவது போன்ற அன்றாட செலவுகள் தான் இருக்கின்றன. அதைத் தான் கணக்கிட்டு நிதி அமைச்சகத்துக்கு கொடுத்தோம். நிதி அமைச்சக மும் எங்களுக்குத் தேவையான முழு நிதியையும் கொடுத்திருக்கிறது." என பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.
இப்போது மீண்டும் ஆதார் ஒரு புதிய சட்டத்தை மக்களவையில் கொண்டு வந்திருக்கிறது அதன் படி மக்கள் தங்கள் பயோமெட்ரிக் ஐடிக்களை விருப்பத்தின் அடிப்படையில் கொடுக்கலாம். அப்படி விருப்பம் இல்லை என்றால் மக்கள் தங்கள் பயோமெட்ரிக்குகளை ஆதார் டேட்டா பேஸில் இருந்து அழித்துக் கொள்ளலாம்.
சமீபத்தில் தான் ஆதார் அடிப்படையாக வைத்து வங்கிக் கணக்குகளைத் தொடங்குவது மற்றும் மொபைல் போன்களுக்கான சிம் கார்டுகளை கொடுப்பது போன்றவைகள் தடை செய்யப்பட்டது. ஆனால் இன்னும் விருப்பத்தின் அடிப்படையில் வைத்துக் கொள்ளலாம் என புதிய சட்டங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது ஆதார் அமைப்பு.


Click it and Unblock the Notifications