கடந்த டிசம்பர் 2018-ல் (Ministry of Commerce and Industry) மத்திய வணிக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழில் வளர்ச்சிக் கொள்கைகளை வகுக்கும் துறை (Department of Industrial Policy and Promotion) இ காமர்ஸ் நிறுவனங்களுக்கு பல மாற்றங்களைக் கொண்டு வந்தது.
இந்த மாற்றங்கள் எல்லாம் பிப்ரவரி 01, 2019 முதல் அமலுக்கு வந்துவிட்டது. இதனால் அமேஸான் & ஃப்ளிப்கார்ட் போன்ற மிகப் பெரிய இ காமர்ஸ் நிறுவனங்கள் சுமார் 20 - 25 சதவிகித வியாபாரத்தை இழந்து நிற்கிறார்கள்.
சரி அப்படி அமேஸான் மற்றும் ஃப்ளிப்கார்ட் போன்ற மிகப் பெரிய நிறுவனங்களையே சாய்க்கும் அளவுக்கு அப்படி என்ன விதிகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதை பார்த்து விட்டு அமேஸான் மற்றும் ஃப்ளிப்கார்ட் தவிக்கும் தவிப்பைப் பார்ப்போம்.
மாற்றம் 1
அமேஸான், ஃப்ளீப்கார்ட் போன்ற இ காமர்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கும் துணை நிறுவனங்கள், தாய் நிறுவனத்தின் (Parent company) பொருட்களையோ, அதன் (Group company) குழும நிறுவனத்தின் பொருட்களையோ, இ காமர்ஸ் நிறுவனங்கள், முதலீடு செய்திருக்கும் நிறுவன (Invested Company) பொருட்களையோ தன் இ காமர்ஸ் நிறுவனத்தின் வழியாக விற்கத் தடை.
மாற்றம் 2
ஒரு நிறுவனத்தின் பொருட்களை தன்னிடம் மட்டுமே விற்க வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது. அதாவது இனி எக்ஸ்குளூசிவ் விற்பனைகளை செய்யக் கூடாது. எல்லா பொருளும் எல்லா இ காமர்ஸ் நிறுவனத்திலும் கிடைக்க வேண்டும்.
மாற்றம் 3
ஒரு நிறுவனத்துக்கு சார்பாக கேஷ் பேக், உடனடி டெலிவரி, இலவச டெலிவரி, அதிரடி விலை குறைப்பு போன்றவைகளை இனி செய்யக் கூடாது. கேஷ் பேக் என்றால் எல்லா நிறுவனத்துக்கும் கேஷ் பேக் கொடுக்க வேண்டும். இலவச டெலிவரி என்றால் எல்லா பொருளுக்கும் இலவச டெலிவரி வேண்டும்.
மாற்றம் 4
எந்த ஒரு நிறுவனத்தின் மொத்த உற்பத்தியில் 25%-க்கு மேல் ஒரே இ காமர்ஸ் நிறுவனத்திடம் விற்கக் கூடாது. அப்படி விற்றால் அந்த நிறுவனத்தை இ காமர்ஸ் நிறுவனம் கட்டுப்படுத்துவதாகவே கருதப்படும்.
மாற்றம் 5
இ காமர்ஸ் நிறுவனங்கள் பொருளை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் ஒரு பாலமாக மட்டுமே செயல்பட வேண்டுமே ஒழிய, பொருட்களின் விலையை தீர்மானிப்பதில் தலை இடக்கூடாது.
விளைவுகள்
இந்த விதிகள் பிப்ரவரி 01, 2019 முதல் அமலுக்கு வந்துவிட்டதால் வழக்கம் போல தங்கள் பொருட்களை விற்க முடியவில்லை. ஒரே நாளில் 100 ரூபாய்க்கு வர்த்தமாகிக் கொண்டிருந்த இடத்தில் இப்போது 70 - 75 ரூபாய் தான் வியாபாரமாகிறதாம். ஃப்ளிப்கார்ட் கூட மேலே சொன்ன விதிகளால் அதிகம் பாதிக்கப்படவில்லை ஆனால் அமேஸான் தான் முதலீடு செய்திருக்கும் பல்வேறு நிறுவனங்களின் பொருட்களை விற்க முடியாமல் தவித்து வருகிறதாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications