ஐடிபிஐ. இந்தியாவின் அரசுத் துறை வங்கிகளில் ஒன்று. இதில் கவனிக்க வேண்ட்ய விஷயம் என்னவென்றால் இந்த ஐடிபிஐ வங்கியின் பெரும்பாலான பங்குகளை அதாவது 51% பங்குகளை இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் வைத்திருக்கிறது.
அதன் பின் இந்த வங்கியின் பங்குகளில் அதிகப்படியாக 46 சதவிகித பங்குகளை இந்திய அரசே வைத்திருக்கிறது. இது போக மீதமுள்ள மூன்று சதவிகித பங்குகளைத் தான் மக்கள் வைத்திருக்கிறார்கள். இதனாலேயே இந்த வங்கியின் முடிவுகள் நிதி நிலை அறிக்கைகள் எல்லாமே முக்கிய கவனத்தை ஈர்க்கின்றன.
இன்று பிப்ரவரி 04, 2019-ல் ஐடிபிஐ வங்கியின் காலாண்டு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. வழக்கம் போல் சொதப்பி இருக்கிறது ஐடிபிஐ
நிகர நட்டம்
2018 அக்டோபர் முதல் டிசம்பர் வரையான மூன்று மாதங்களுக்குநிகர நட்டமாக 4,185 கோடி ரூபாயைக் காட்டி இருக்கிறார்கள். 2017 அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலாண்டுக்கு 1,524 கோடி ரூபாய் மட்டுமே நிகர நஷ்டமாக காட்டி இருந்தார்கள் ஆக சுமார் 175 சதவிகிதம் கூடுதல் நட்டம் அடைந்திருக்கிறது வங்கி.
ரிசர்வ்கள் மற்றும் ப்ரொவிசன்கள்
எல்லா நிறுவனத்துக்கும் கொஞ்சம் பணத்தை ரிசர்கள் மற்றும் அவசர செலவுகளுக்கு என ஒதுக்கி வைப்பார்கள். அப்படி ஒதுக்கும் நிதி இந்த காலாண்டுக்கு 6,530 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இது 2017 டிசம்பர் காலாண்டை விட 40.2 % அதிகம்.
வாராக் கடன்கள்
2018 டிசம்பர் காலாண்டில் மொத்த வாராக் கடன்கள் (Gross NPA) 29.67 % ஆக அதிகரித்திருக்கிறதாம். இதுவே 2017 டிசம்பர் காலாண்டில் 24.72 % ஆக இருந்திருக்கிறது. 2018 செப்டம்பர் காலாண்டில் மொத்த வாராக் கடன்கள் 31.78 என்கிற மிக அபாயகரமான அளவில் இருந்திருக்கிறது. நிகர வாராக் கடன்களுக்கும் இதே நிலை தான்.
நிகர வட்டி வருவாய்
செலவுகள் தான் அதிகரித்திருக்கிறதே வருவாயும் அதிகரித்திருக்குமா எனப்பார்த்தால் அதுவும் அதிகரிக்கவில்லை. 2018 டிசம்பர் காலாண்டில் 1,356 கோடி ரூபாய் மட்டுமே வட்டி வருவாயாக வந்திருக்கிறது. 2017 டிசம்பர் காலாண்டில் 1,665 கோடி ரூபாய் வட்டி வருவாயாக வந்திருக்கிறது. இதோடு டெபாசிட்டுகளும் 3% குறைந்திருக்கிறது. கடன் கொடுப்பதும் 16.77 சதவிகிதம் சரிந்திருக்கிறது என ஐடிபிஐ நிதிநிலை அறிக்கைகள் சொல்கின்றன.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications