நம் தமிழகத்தின் டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்கள் மற்றும் நகர் புறங்களில் இன்னும் பணத்தை பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் காலாச்சாரம் வரவில்லை.
நகர்புறங்களே அப்படித் தான் இருக்கிறது என்றால் கிராமபுறங்களைச் சொல்லவே தேவை இல்லை. கிராமபுற மக்களுக்கு பங்குச் சந்தைகள், மியூச்சுவல் ஃபண்டுகள் எல்லாமே ஒரே இடம் தான். அஞ்சலகம்.
அட ஆமாங்க அஞ்சலகத்தில் நிரந்தர வருமானம் கொடுக்கக் கூடிய அஞ்சல ஆர்டி, மாதாந்திர வருமான திட்டங்கள், கிஷான் விகாஸ் பத்திரம், ஐந்து வருட டெபாசிட்டுகள் என கிராம புற மக்களின் உற்ற தோழனாகவே இருக்கிறது அஞ்சலகங்கள்.
வேண்டாம்யா..?
ஒருவேகத்தில் காசு சேர்க்க அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் தொடங்கப்பட்டு, அடுத்த சில மாதங்களிலேயே ஒழுங்காக காசைச் செலுத்தாமல் விட்ட கணக்குகள், போட்ட டெபாசிட்டுகளை முறையாக கட்டணம் செலுத்தி பெறாமல் இருப்பது, பத்திரங்களைச் சமர்பித்து பணத்தை வட்டி உடன் திருப்பி பெறாமல் இருப்பது என அசல் தொகை மட்டும் சுமார் 9,395 கோடி ரூபாய் இருக்கிறதாம்.
நம்பர் 1
கிஷான் விகாஸ் பத்திரம் எனப்படும் விவசாய பத்திரங்களில் 2,429 கோடி ரூபாய்க்கான பத்திரங்களைச் சமர்பித்து பணத்தை வாங்காமல் அஞ்சலகங்களிலேயே தேங்கிக் கிடக்கிறதாம். அஞ்சலக திட்டங்களிலேயே அதிகமாக பணத்தைக் கோராமல் இருப்பது இந்த திட்டத்தின் கீழ் தானாம்.
எந்த திட்டங்களில் எவ்வளவு..?
விவசாயப் பத்திரங்களைத் தொடர்ந்து மாதாந்திர வருமானத் திட்டங்களில் 2,057 கோடி ரூபாயும், அதனைத் தொடர்ந்து டேர்ம் டெபாசிட்டுகளில் 1,935 கோடி ரூபாயும், தேசிய சேமிப்புச் சான்றுகள் மூலம் 1,888 கோடி ரூபாயும், ஆர்டி திட்டங்களில் 796 கோடி ரூபாயும், பிபிஎஃப் Public Provident Fund திட்டத்தின் கீழ் 289 கோடி ரூபாயும் உரிமை கோரப்படாமல் இருக்கிறதாம்.
என்ன செய்கிறார்கள்..?
வங்கிகளில் இப்படி ஒரு குறிப்பிட்ட வருடத்துக்கு மேல் கணக்குகளில் இருக்கும் தொகையை உரிமை கோரவில்லை என்றால் அந்த தொகையினை ஆர்பிஐயின் Deposit Awareness and Education Fund (DEAF) திட்டத்துக்கு மாற்றி விடுவார்கள். ஆனால் அஞ்சலகங்களில் இந்த தொகைகளை உரிய நபர் வந்து முறையாக உரிமை கோரும் வரை அஞ்சலகங்களிடமே தான் பணம் இருக்குமாம்.
தமிழனா கொக்கா..?
தங்கள் முதலீட்டுத் தொகைகளை உரிமை கோராத நபர்கள் மேற்கு வங்கத்தில் தான் அதிகம். மேற்கு வங்கத்தில் மட்டும் 1,591 கோடி ரூபாய் உரிமை கோறப்படாமல் இருக்கிறதாம். அதனைத் தொடர்ந்து தில்லியில் 1,112 கோடி ரூபாயும், அவர்களைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் 1,034 கோடி ரூபாயும் இருக்கிறதாம். நம் தமிழர்கள் தான் காசு விஷயத்தில் கறார் ஆச்சே அப்புறம் எப்புடிங்க நம்ம பேர் எல்லாம் இதுல வரும்..?
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications