அனில் அம்பானியை துளைக்கும் எரிக்ஸன் “காச கொடுக்க வக்கில்ல நீ எல்லா எதுக்கு வியாபாரம் பாக்குற”

ஃபோர்ப்ஸ் நிறுவன பட்டியலில் ஒரு இந்தியர் பெயர் வந்துவிடாதா என ஏங்கிக் கொண்டிருந்த இந்தியர்களுக்கு இந்தியர்களை வைத்தே காசு பார்த்து இன்று பட்டியலில் இருப்பவரின் பெயர் முகேஷ் அம்பானி.

முகேஷ் அம்பானி, அடுத்த 30 வருடத்தில் இந்திய பிசினஸ் என முன்னோக்கி வியாபாரம் செய்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் அவரின் தம்பி அனில் அம்பானியை கண்ட மேனிக்கு திட்டிக் கொண்டிருக்கிறார்கள். கடன் காரர்கள்.

இத்தனைக்கும் அனில் அம்பானி கூட ரிலையன்ஸ் கேப்பிட்டல் என்கிற பெயரில் ஒரு நிதி நிறுவனத்தை வேறு நடத்துகிறார். இப்போது எரிக்ஸன் என்கிற சுவிட்சர்லாந்து நிறுவனம் இந்திய மீடியா வெளியில் அனில் அம்பானியை புரட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்...! ஏன்..? என்ன பிரச்னை..?

ரிலையன்ஸ் & எரிக்ஸன்

ரிலையன்ஸ் & எரிக்ஸன்

அனில் அம்பானியின் ஆர்காம் (Reliance Communication) நிறுவனம் சுவிர்சர்லாந்தின் எரிக்ஸன் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டது. அதன் படி 2014 முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஆர்காம் நிறுவனத்தை நிர்வகித்து தொலைத் தொடர்புச் சேவையை வழங்க வேண்டும். இதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்குவதாக ஒப்புக் கொண்டது ஆர்காம். 2014 முதல் ஆர்காம் தன் சேவையை நிறுத்திக் கொள்ளும் வரையான காலத்துக்கு, எரிக்ஸனுக்கு வழங்க வேண்டிய தொகை 1600 கோடி ரூபாய். இந்த நிலுவைத் தொகையை வழங்கவில்லை ஆர்காம்.

மும்பை

மும்பை

எரிக்ஸன் நிறுவனம் கேட்டுப் பார்த்து சலித்த உடன் நேரடியாக (NCLAT - National Company Law Appellate Tribunal அமைப்பிடம் ஆர்காம் காசைக் கொடுக்க மறுப்பதாக புகார் எழுப்பியது. தனக்கு வந்து சேர வேண்டிய முழு தொகையையும் (1600 கோடி ரூபாயும்) தர வேண்டும் என வாதிட்டது எரிக்ஸன். நொடிந்த பிசினஸில் எப்போதுமே கடன் தாரர்களுக்கு முழு தொகை கிடைக்காது. ஆர்காம் நிறுவனத்துக்கு இருக்கும் மொத்த சொத்து மற்றும் கடன் தொகையைப் பொறுத்து, விகிதாச்சார அடிப்படையில் தான் கொடுக்கப்படும் என NCLAT தெளிவாகச் சொன்னது.

கணக்கீடுகள்

கணக்கீடுகள்

உதாரணமாக ஆர்காம் நிறுவனம் 5 பேருக்கு 100 ரூபாய் தர வேண்டி இருக்கிறது. ராம் - 30 ரூபாய், கிருஷ் - 30 ரூபாய், சலீம் - 20 ரூபாய், கான் - 10, சுனில் - 10 ரூபாய் என பணம் தர வேண்டும். ஆனால் அவர் கையில் 50 ரூபாய்க்குத் தான் சொத்துக்கள் இருக்கின்றன. இப்போது மொத்த கடனை விகிதாச்சார அடிப்படையில் கணக்கிடுங்கள். ராம் 30%, கிருஷ் - 30%, சலீம் -20%, கான் -10, சுனில் -10%. இப்போது ஆர்காமில் மொத்த சொத்துக்களை விற்று வரும் பணத்தில் ராம் -30%, கிருஷ் - 30%, சலீம் -20%, கான் -10, சுனில் -10% என பிரித்து வழங்குவார்கள். ஆக ஆர்காமின் சொத்துக்கள் விற்று கிடைத்த தொகை 50 ரூபாய் எனவே ராம் -15 ரூபாய், கிருஷ் - 15 ரூபாய், சலீம் - 10 ரூபாய், கான் -5 ரூபாய், சுனில் -5 ரூபாய் என பிரித்து வழங்கப்படும் .

எல்லாம் போக இவ்வளவு தான்

எல்லாம் போக இவ்வளவு தான்

NCLAT கணக்கிட்ட படி ஆர்காம், எரிக்ஸன் நிறுவனத்துக்கு 550 கோடி ரூபாயை தர வேண்டியதாக கணக்கு வந்தது. சரி எல்லாம் முடிந்தது நம் தலையெழுத்து 1600 கோடிக்கு 550 கோடி தான் வரப் போகிறது என தயாராக இருந்த எரிக்ஸனுக்கு மேலும் ஒரு ட்விஸ்ட் காத்திருந்தது.

நானே விற்றுத் தருகிறேன்

நானே விற்றுத் தருகிறேன்

திடீரென மும்பை NCLAT அமைப்பிடம் "எரிக்ஸனுக்கான கடனை நாங்களே அடைத்துவிடுகிறோம்" எங்கள் நிறுவனத்தின் மீது தொடுத்திருக்கும் Insolvency வழக்கையும், எங்கள் சொத்துக்களை NCLAT விற்பதையும் தடுக்கவும் என கேட்டுக் கொண்டது. சரி போனால் போகட்டும் என 550 கோடி ரூபாயை விரைவில் கொடுக்க வேண்டும் என NCLAT வலியுறுத்தி ஆர்காம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. நிறுவன சொத்துக்களை விற்கும் வேலையைக் கைவிட்டது.

ஏமாற்றிய அனில் அம்பானி

ஏமாற்றிய அனில் அம்பானி

உச்ச நீதிமன்றமும் ஆர்காமின் வாதங்களை ஒப்புக் கொண்டு 550 கோடி ரூபாயை செப்டம்பர் 30, 2018-க்குள் தரச் சொன்னது. ஆனால் கொடுக்கவில்லை. மீண்டும் எரிக்ஸன் உச்ச நீதிமன்றத்தில் ஆர்காம் மீது வழக்கு தொடுத்தது. இந்த முறை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு. உச்ச நீதிமன்றம் குறித்த தேதிக்குள் பணத்தைக் தரவில்லை என வாதிட்டது எரிக்ஸன். மீண்டும் மன்னிப்பு கேட்டு டிசம்பர் 15, 2018 வரை கால அவகாசம் வாங்கிக் கொண்டது ஆர்காம்.

கடுப்பான எரிக்ஸன்

கடுப்பான எரிக்ஸன்

இப்போதும் கொடுக்கவில்லை என்ற உடனேயே மீண்டும் நீதி மன்றத்தில் வழக்கு போட்டு விட்டது எரிக்ஸன். இதை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இது ஒரு பக்கம் போக பிப்ரவரி 01, 2019 அன்று ஆர்காம் Insolvency நிறுவனம். அதாவது தன்னால் நிறுவனத்தை நடத்த முடியவில்லை என NCLAT அமைப்பிடமே சரணடைந்துவிட்டது. ஆனால் எரிக்ஸன் நிறுவனம் இதை எதிர்த்து NCLAT அமைப்பிலேயே வழக்கு தொடர்ந்திருக்கிறது.

எரிக்ஸனுக்கு நட்டம்

எரிக்ஸனுக்கு நட்டம்

எரிக்ஸன் நிறுவனம் 2018 காலத்தில் ஆர்காம் NCLAT அமைப்புக்கு வந்த போதே 1600 கோடிக்கு பதிலாக 550 கோடி ரூபாய் தான் கணக்கிடப்பட்டது. இப்போது ஆர்காமின் சில சொத்துக்கள் விற்கப்பட்டும், சொத்துக்களின் விலை குறைந்தும் இருக்கும் என்பதால் மீண்டும் NCLAT மூலம் பணம் வர வேண்டும் என்றால் 300 கோடி கூட தேறாது என கனக்கிட்ட்டிருக்கிறது எரிக்ஸன். எனவே ஆர்காம் நிறுவனம் தனக்கு கொடுக்க வேண்டிய 550 கோடி ரூபாயை முழுமையாக செலுத்திய பின் தான் NCLAT-ன் நடவடிக்கைகளுக்கு உட்பட வேண்டும் என தன் தரப்பு எதிர்ப்பு மனுவை வரும் பிப்ரவரி 08-ம் தேதி தாக்கல் செய்ய இருக்கிறது.

இந்த அனில் அம்பானிய நம்பி பிசினஸ் செய்ததற்கு இத்தனை வழக்குச் செலவுகள் வேறு என வருத்தம் வேறுபட்டுக் கொண்டிருக்கிறதாம். அதோடு காசு கொடுக்கு வழி இல்லாத இவர்களோடு எல்லாம் பிசினஸ் செய்ய வந்தது தங்கள் நேரக் கிரகம் என எரிக்ஸன் நிறுவன மேல் அதிகாரிகள் துஸ்யந்த் தவே உட்பட பல்வேறு இந்தியர்களிடம் புலம்பிக் கொண்டிருக்கிறார்களாம்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+