2,75,000 கோடி தானா, மக்களை வைத்து இவ்வளவு தான் சம்பாதிக்க முடிந்ததா..? கோபத்தில் கூகுள்.!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப் பெரிய இணைய நிறுவனங்களில் ஒன்று கூகுள். கூகுளின் தாய் நிறுவனம் ஆல்ஃபபெட்.
அல்ஃபபெட் (Alphabet) கடந்த 2017 டிசம்பர் காலாண்டில் ஈட்டிய 32.6 பில்லியன் டாலரை விட 22% கூடுதலாக 2018 டிசம்பர் காலாண்டில் 39.3 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டி இருக்கிறது.

 

கூகுள் எதிர்பார்த்து கணித்து வைத்திருந்த அளவுக்கு விளம்பர வருவாய் வரவில்லை யாம். அதனாலேயே தலைப்பில் கேட்ட கேள்வியை கூகுள் இயக்குநர் குழு விளம்பர பிரிவிடம் கேட்டிருக்கிறதாம். அடுத்த காலாண்டில் பிடித்து விடலாம் என இயக்குநர் குழுவுக்குச் சமாதானம் சொல்லி இருக்கிறார்களாம்.

ஆங்கிலத்தில் Traffic and acquisition cost என்பார்கள். அதாவது ஒருவரை மீண்டும் மீண்டும் தன் வலைதளத்தை பயன்படுத்த வைக்க செய்யும் செலவுகளை இந்த தலைப்பில் அடக்கலாம்.

ஆப்பிள் கட்டணம்

ஆப்பிள் கட்டணம்

அப்படி ஆப்பிள் நிறுவன சாதனங்களில் கூகுள் default ப்ரவுசராக இருக்க கொடுக்கும் பணம் 7.4 பில்லியனாக் அதிகரித்திருக்கிறது. இதற்கு முன் இந்த கட்டணம் 6.6 பில்லியனாகத் தான் இருந்தது.

நிகர லாபம்

நிகர லாபம்

ஆல்ஃபபெட் (Alphabet) தன் நிகர லாபகமாக 8.9 பில்லியன் டாலரைக் காட்டி இருக்கிறது. இது கடந்த 2017 டிசம்பர் காலாண்டை விட 22 சதவிகித அதிக தொகை. இருப்பினும் அமெரிக்க சந்தைகளில் கூகுளின் பங்கு விலை தொடர்ந்து இறக்கத்தில் தான் வர்த்தகமாகி வருகிறதாம்.

மற்ற பிசினஸ்கள்
 

மற்ற பிசினஸ்கள்

கூகுளின் மிக முக்கிய விளம்பர வருவானம் போக கூகுள் பிக்ஸல் உட்பட ஹார்டுவேர்கள் விற்பனை, ப்ளே ஸ்டோரில் இருந்து வரும் வருமானம், கூகுள் க்ளவுட் போன்ற சேவைகளில் இருந்தும் வருவாய் வருகிறதாம். இந்த சேவகளில் இருந்து மட்டும் 6.4 பில்லியன் டாலர் வருகிறது.

வெளிவரும் பிரச்னைகள்

வெளிவரும் பிரச்னைகள்

தற்போது கூகுளில் மொத்தம் 98,771 பேர் பணியாற்றுகிறார்களாம். சமீபத்தில் கூகுள் நிறுவனத்தின் மீது ஒப்பந்த ஊழியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து சில புகார்கள், கூகுள் நிறுவனத்தின் நிலவும் பாலியல் தொல்லைகள் குறித்த பிரச்னைகள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கி இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

google quarterly results declared but stocks are in negative

google quarterly results declared but stocks are in negative. net profit and revenue improved, traffic and acquisition cost also increased
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X