மோடி ஆட்சியின் முடிவில் இதுவும் மோசம் தானா..? அது எது..?

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரூ: கடந்த ஜனவரி 30, 2019-ல் தான் இந்திய அரசே வெளியிடாமல் வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் வெளியாயின.

 

அதனைத் தொடர்ந்து, இந்தியப் பொருளாதாரத்தையே தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் சேவைத் துறையின் வளர்ச்சி குறைந்திருக்கும் செய்தியும் இபோது வெளியே வந்திருக்கிறது. மோடி மக்களைவைத் தேதலைச் சந்திக்கும் நேரத்தில் தான் இப்படிச் சரிவு விவரங்கள் வர வேண்டுமா..?

ஆனால் அந்த வளர்ச்சியைச் சேர்த்து இந்திய உற்பத்தித் துறை ஈடுகட்டி இருக்கிறதாம்.

ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

மொத்த இந்தியப் பொருளாதாரத்தில் 50 சதவிகிதத்துக்கு மேல் ஜிடிபி வருவது இந்தியாவின் சேவைத் துறைகளில் இருந்து தான். இந்த துறையின் கீழ் வர்த்தகங்கள், ஹோட்டல்கள், போக்குவரத்து, தொலைத் தொடர்பு, ஒளிபரப்புகள், நிதி சார்ந்த சேவைகள், ரியல் எஸ்டேட், ராணுவம் என பல்வேறு துறைகள் இதன் கீழ் தான் வரும்.

யார் கணித்திருக்கிறார்

யார் கணித்திருக்கிறார்

The Nikkei/IHS Markit என்கிற நிறுவனம் ஒவ்வொரு மாதமும் Services Purchasing Managers' Index என்கிற பெயரில் தரவுகளை வெளியிடும். கடந்த ஜனவரி 2018-ல் பிஎம்ஐ 52.2 என்கிற புள்ளிகளுக்கு சரிந்திருக்கிறது. அதற்கு முந்தைய மாதம் டிசம்பர் 2018-ல் இந்த பிஎம்ஐ 53.2 என்கிற வலுவான நிலையில் இருந்தது.

பிரச்னை
 

பிரச்னை

உள்நாட்டில் தேவை குறைந்திருப்பது, விலை வாசி அதிகரித்திருப்பது, வெளிநாட்டு விற்பனைகளில் டல்லடித்திருப்பது, புதிய ஆர்டர்கள் குறைந்திருப்பது போன்ற காரணங்களால் ஒட்டு மொத்த பிஎம்ஐ-யும் சரிந்திருக்கிறதாம். இதில் புதிய ஆர்டர்கள், வரலாறு காணாத அளவுக்கு சரிந்திருக்கிறதாம்.

ஆட்களுக்கு வேலை வாய்ப்பு

ஆட்களுக்கு வேலை வாய்ப்பு

இருப்பினும் பல நிறுவனங்களில் புதிதாக ஆட்களைக் வேலைக்கு எடுத்துக் கொண்டே தான் கொண்டு வந்து கொண்டே தான் இருக்கிறார்களாம். ஆகையால் இனி வரும் மாதங்களில் பிஎம்ஐ அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கிறார்களாம். ஆக தேர்தலுக்குப் பின் சேவைத் துறை இந்தியாவில் மீண்டும் தலை எடுக்கும் என எதிர்பாக்கிறார்களாம்.

ஒட்டு மொத்தத்தில்

ஒட்டு மொத்தத்தில்

இந்தியாவின் சேவைத் துறை மற்றும் உற்பத்தித் துறையின் பிஎம்ஐ-களைக் கணக்கிட்டால் ஜனவரி மாதத்துக்கான பிஎம்ஐ கடந்த டிசம்பர் 2018-ல் இருந்த 53.6 என்கிற அதே அளவில் நீடிக்கிறதாம்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

indias service sector is going down in modi regime

indias service sector is going down in modi regime
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X