“சும்மா குறை சொல்லாதீங்க, Ola, uber 20 லட்ச வேலைகளை உருவாக்கி இருக்கு” அமிதாப் ஆதரவு..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீபத்தில் தேசிய மாதிரி சர்வே அமைப்பு (National Sample Survey Organisation) என்கிற அமைப்பு தான் இந்தியாவில் பல்வேறு கள நிலவரங்களை கணக்கெடுத்து அரசுக்கு சொல்லி வருகிறது.

இது சமீபத்தில் வெளியிட்ட வேலை வாய்ப்பு கணக்கீடுகளில், கடந்த 1973-ல் இருந்ததைப் போல இந்தியாவில் வேலை வாய்ப்பு குறைந்திருக்கிறது. இந்தியாவில் 100க்கு 6.1 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை என பகீர் கிளப்பியது.

இதை வைத்து எதிர் கட்சிகளில் ராகுல் காந்தி தொடங்கி மாநிலக் கட்சிகள் வரை துவைத்து எடுத்துவிட்டார்கள். இதை சமாளிக்கும் விதத்தில் நிதி அயோக் களம் இறங்கி இருக்கிறது.

நிதி ஆயோக்

நிதி ஆயோக்

மோடியால் உருவாக்கப்பட்ட நிதி அயோக் அமைப்பின் முதன்மை செயல்பட்டு அதிகாரி அமிதாப் காந்த் மற்றும் நிதி அயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜிவ் குமாரும் பாஜகவை, ஆளும் கட்சியை காப்பாற்றும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

செயலிகளால் வேலை

செயலிகளால் வேலை

ஓலா, உபர் ஆகிய இரண்டு நிறுவனங்களால் மட்டும் கடந்த 2014-ல் இருந்து சுமார் 22 லட்சம் வேலை வாய்ப்புகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த வேலை வாய்ப்புகள் நிச்சயமாக தரமான நிலையான வேலை வாய்ப்புகள் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறோம் என சமாளித்திருக்கிறார்கள்.

தேர்தல் வருதே

தேர்தல் வருதே

ஒவ்வொரு ஆண்டிலுல் டிசம்பர் மாதத்தில் வேலை இல்லாத் திண்டாட்டம் குறித்த விவரங்கள் தேசிய மாதிரி சர்வே அலுவலகம் (National Sample Survey Office - NSSO) முறையாக வெளியிடப்படும். ஆனால் இந்த ஆண்டு மட்டும் சில அரசியல் அழுத்தங்கள் மற்றும் அரசு அமைப்புகளில் அழுத்தம் காரணமாக தாமதமானது வருத்தத்துக்குரியது என தேசிய மாதிரி சர்வே அலுவலகம் (National Sample Survey Office - NSSO) தலைவர் மோகனனே வாக்குமூலம் வேறு கொடுத்திருந்தார்.

இதுவரை இல்லை

இதுவரை இல்லை

நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜிவ் குமார் "இதுவரை வெளியானது எல்லாம் வெறும் செய்திகள் மட்டுமே, உண்மையான தரவுகளுடன் வரும் மார்ச் 2019-ல் முழு வேலைவாய்ப்பு விவரங்கள் வெளியாகும்" எனச் சொல்லி இருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

niti aayog is in a rescue mission to save ruling government on unemployment issue

niti aayog is in a rescue mission to save ruling government on unemployment issue. niti aayog vie chairman rajiv kumar said that whole unemployment data will be released on march 2019.
Story first published: Tuesday, February 5, 2019, 11:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X