இந்தியாவில் 15 கோடி ஸ்மார்ட் போன்கள் விற்பனை ஆகும்..! டெக் ஆர்க் கணிப்பு

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு காலத்தில் பேசுறதுக்கு தானயா போனு, அப்புறம் அதுல மிக்ஸி இல்ல கிரைண்டர் இல்லன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க என பழமைவாதிகளாக இருந்தவர்கள் தான் இன்று ஸ்மார்ட் போன்களில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

டெகார்க் (Techarc) என்கிற நிறுவனம் இந்தியாவில் மொபைல் போன்கள் சந்தை எபப்டி இருக்கும் என்ன மாதிரியான போன்கள் அதிகம் வியாபார்ம ஆகும், எத்தனை போன்கள் வியாபார்ம ஆகும் என முந்தைய செல் போன் சந்தை நடப்புகளை வைத்து கணித்திருக்கிறது.

அவர்கள் கணிப்புப் படி இந்தியாவின் 2019-ம் ஆண்டில் சுமார் 14.9 கோடி போன்களை வரை விற்கப்படலாம் என கணித்திருக்கிறார்கள்.

10,000 ரூபாய்க்கு கீழ்

10,000 ரூபாய்க்கு கீழ்

இந்திய சந்தைகளில் 2018-ம் ஆண்டில் விற்கப்பட்ட செல்போன்களில் 28% 10,000 ரூபாய்க்கு கீழ் விலை வைத்து விற்கப்பட்ட போன்களாம். இந்த 2019-ம் ஆண்டில் 10,000 ரூபாய்க்கு கீழ் விலையுள்ள போன்களின் விற்பனை 20%-க்குள் மட்டுமே நடக்கும் என ஆரூடம் சொல்லி இருக்கிறார்கள்.

10,000 ரூபாய்க்கு மேல் 25,000-க்குள்

10,000 ரூபாய்க்கு மேல் 25,000-க்குள்

இந்திய சந்தைகளில் 2018-ம் ஆண்டிலேயே விற்பனையான செல்போன்களில் 46% இந்த விலைப் பட்டியல்களில் இருந்த போன்கள் தானாம். இந்த 2019-ம் ஆண்டில் 10,000 ரூபாய்க்கு மேலும் 25,000. ரூபாய்க்கு கீழும் விலை உள்ள போன்களின் விற்பனை மேலும் அதிகரித்து மொத்த சந்தையில் 51% இடத்தைப் பிடிக்குமாம். அதனைத் தொட்ர்ந்து 25,000 - 50,000 ரூபாய்க்குள் விற்கும் போன்களின் விற்பனை மொத்த செல்போன் விற்பனையில் 20% வரை பிடிக்குமாம்

இது தான் காரணம்

இது தான் காரணம்

இந்தியாவில் கிடைக்கும் 4ஜி சேவை, வீடியோ பார்க்கத் தூண்டும் பொழுதுபோக்கு சேனல்கள், ஆன்லைன் கேம்ஸ்கள் போன்றவைகளால் தான் இந்த 10,000 ரூபாய்க்கு மேல் மற்ரும் 25,000 ரூபாய்க்குள்ளான பிரிவின் விற்பனை பயங்கரமாக அதிகரித்திருக்கிறது. அதற்கு முன் வரை இத்தனை விலை கொடுத்து எல்லாம் வாங்க இந்தியாவில் ஆளே கிடையாது.

ஆப்பிள், பிக்ஸல்

ஆப்பிள், பிக்ஸல்

உலகிலேயே விலை உயர்ந்த கூகுள் பிக்ஸல் 3, ஆப்பிள் ஐபோன் Xs, சாம்சங் கெலாக்ஸி S9 போன்ற ஹை எண்ட் மாடல்கள் எல்லாம் 2019-ன் மொத்த விற்பனையில் சுமார் 9% வரை மட்டுமே இடம் பிடிக்குமாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: mobile smartphone
English summary

techarc estimated around 15 crore smartphones sales in India for 2019

techarc estimated around 15 crore smartphones sales in india for 2019
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X