இந்தியா அரசு வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வெளிநாடு ஓடிப் போகலாம் என்கிற டிரெண்டை இந்தியா முழுமைக்கு டிரெண்ட் ஆக்கிய பிசினஸ் மேன் நம் எஸ்பிஐ புகழ் விஜய் மல்லையா தான்.
சுமார் 9000 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, அதை திருப்பிக் கட்டச் சொன்னால் நான் கடன் வாங்கவில்லை கிங்ஃபிஷ்ஷர் விமான நிறுவனம் தான் கடன் வாங்கியது என ஸ்டேட்மெண்ட் கொடுப்பவர்.
கடந்த 10 டிசம்பர் 2018-ல் தான் இங்கிலாந்தின் வெஸ்மின்ஸ்டர் நீதிமன்றம் மல்லையாவின் வழக்கு தீர்ப்பை உள் துறை அமைச்சகத்துக்கு அனுப்பியது. அதோடு மல்லையா கடன் வாங்கி தப்பி ஓடியதையும் நீதிமன்றம் உறுதி செய்து விலை உயர்ந்த கார்களை எல்லாம் பறிமுதல் செய்யச் சொன்னது.
இங்கிலாந்து அனுமதி
நேற்று பிப்ரவரி 04, 2019, இங்கிலாந்தின் உள்துறை செயலர் சஜித் ஜாவித் விஜய் மல்லையாவை இந்தியா அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்க அனுமதி கொடுத்தார். இப்படி உள் துறை அமைச்சகர் அனுமதி கொடுத்த பின்னும், இங்கிலாந்தின் உள் துறை அமைச்சக அனுமதியை எதிர்த்து மேல் முறையீடு செய்ய மல்லையாவுக்கு 14 நாட்கள் கெடுவும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை மல்லையா தன் டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார்.
தாமதமாகும்
இப்படி விஜய் மல்லையா இங்கிலாந்தின் சட்ட திட்டங்களை முழுமையாக பயன்படுத்தினால் குறைந்தபட்சம் 6 - 8 மாதங்களாவது வழக்கு நடக்கும். அதுவரை இந்தியாவும் இதே வேகத்தில் இங்கிலாந்து அரசுடன் பேச வேண்டும்.
நோக்கம் மாறுமா..?
நடுவில் வேகம் குறைந்தால் இந்த 8 மாதங்கள் என்பது வருடக் கணக்கில் கூட ஆகலாம். ஆக இந்தியாவில் ஆட்சி மாறினாலும், மல்லையாவை இந்தியா கொண்டு செல்ல வேண்டும் என்கிற இந்திய அரசின் நோக்கம் மாறிவிடக் கூடாது என இங்கிலாந்தின் குடியுரிமை அதிகாரிகள் சொல்கின்றனர்.
இந்தியா தரப்பு
எப்படியும் கூடிய விரைவில் மல்லையவை இந்தியா கொண்டு வந்தே தீருவோம் என சிபிஐ, அமாலாக்கத் துறைகள் கழுகுப் பார்வையோடு சுற்றி வருகிறார்களாம். அதோடு சட்ட ரீதியாக மல்லையாவின் வாதங்களை உடைத்து, அவரை இந்தியா கொண்டு வரவும் இங்கிலாந்து அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களோடும் பேசி வருகிறார்களாம்.
கூல் விஜய் மல்லையா
டிசம்பர் 10, 2018 அன்றே வழக்கௌ மேல் முறையீடு செய்திருப்பேன்... ஆனால் உள் துறை அமைச்சகத்தின் முடிவுக்குப் பின் தான் மேல் முறையீடு செய்ய வேண்டுமாம். ஆக உள் துறை அமைச்சகத்தின் முடிவுக்காக காத்திருந்தேன் வந்துவிட்டது. இப்போது மேல் முறையீடு செய்கிறேன் என அசால்டாக ட்விட்டி இருக்கிறார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications